இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்...எப்போ ரிலீஸ் தெரியுமா
சென்னை : டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், சூர்யாவின் 40 வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதாம். இதை முடித்த பிறகு அக்டோபரில் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகளை சூர்யா துவங்க போகிறாராம்.

தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங் காரைக்குடியில் நடந்து வருகிறது. இங்கு நடக்கும் ஷுட்டிங் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளதாம். நேற்றுடன் எதற்கும் துணிந்தவன் படத்தின் 75 சதவீதம் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாம்.
கடந்த மாதம் முதலே எதற்கும் துணிந்தவன் படக்குழுவினரும், சூர்யாவும் காரைக்குடியில் தான் முகாமிட்டு, விறுவிறுப்பாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் மீதமுள்ள 25 சதவீதம் படப்பிடிப்பும் காரைக்குடியில் தான் நடத்தப்பட உள்ளதாம்.
எதற்கும் துணிந்தவன் படத்தின் முழு படப்பிடிப்பும் செப்டம்பர் மாத இறுதியுடன் முடிக்கப்பட உள்ளதாம். அதற்கு பிறகு வாடிவாசல் வேலைகளை சூர்யா துவங்க உள்ளார். டைரக்டர் வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்தின் ஷுட்டிங்கை முடித்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை கவனித்து வருகிறாராம்.
சூரி லீட் ரோலில் நடிக்கும் விடுதலை படத்தில், அவர் போலீசாகவும், விஜய் சேதுபதி நக்சலைட் ரோலில் நடிக்கிறார்களாம். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அடுத்த மாதம் தான் நிறைவடைய உள்ளதாம். இதனால் வாடிவாசல் படத்தின் வேலைகளை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனராம். இது மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
செப்டம்பர் மாத இறுதியுடன் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைவதால் அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கப்பட உள்ளதாம். இந்த ஆண்டு இறுதிக்கும் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அனேகமாக சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் ஜெய் பீம் படம் ஓடிடி.,யில் ரிலீசாகும் அதே சமயத்தில் எதற்கும் துணிந்தவன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











