»   »  ஜல்லிக்கட்டு: படம் போட்டு ஆதரவு தெரிவித்த சூர்யாவின் செல்லங்கள்

ஜல்லிக்கட்டு: படம் போட்டு ஆதரவு தெரிவித்த சூர்யாவின் செல்லங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவின் குழந்தைகள் ஜல்லிக்கட்டை ஆதரித்து காளையின் படத்தை வரைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். இதை பார்த்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்போ அவர் தனது சி3 படத்தின் விளம்பரத்திற்காக அறிக்கை வெளியிட்டதாக திமிர் பேச்சு பேசியது.

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பு அளித்து சூர்யா தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.

ஜல்லிக்கட்டை ஆதரித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் சூர்யா கலந்து கொண்டார். இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா ஆகியோர் ஜல்லிக்கட்டை ஆதரித்து காளையின் படத்தை வரைந்துள்ளனர்.

அந்த படங்களை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

English summary
Suriya's son Dev and daughter Diya have also expressed their support for Jallikattu by drawing the picture of bull.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil