»   »  30 லட்சம் பேரைத் திரும்பிப் பார்க்க வைத்த” மாஸ்” டீசர்!

30 லட்சம் பேரைத் திரும்பிப் பார்க்க வைத்த” மாஸ்” டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ் திரைப்பட டீசர் கடந்த மாதம் 24 ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த டீசரைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

அஜித், விஜய் படங்களுக்கு அடுத்து ரசிகர்கள் அதிகம் பேர் நடிகர் சூர்யாவின் டீசரைப் பார்த்து ரசித்திருப்பதால் அடுத்த மாஸ் ஹீரோ சூர்யா தான் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.ஆதவன் படத்திற்குப் பின் நயன்தாராவுடன் சூர்யா சேர்ந்து நடிப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காதல் காட்சிகளை எதிர்பார்த்தனர், ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி அந்த ஆர்வத்தில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டார்.


இதுவும் பேய்ப் படம்தான். ஆனால் இதுவரை வந்த பேய்ப் படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான பேய்ப்படம் என்கிறார்கள்.


எடுக்கிறது பேய்ப்படம், அதில என்ன வித்தியாசம் வேண்டி இருக்கு...!


English summary
Actor suriya’s mass teaser crossed over 30 lakhs views in social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil