»   »  இதெல்லாம் அதுவா நடக்குதா... இல்ல நீங்க பிளான் பண்ணிப் பண்றீங்களா சூர்யா?

இதெல்லாம் அதுவா நடக்குதா... இல்ல நீங்க பிளான் பண்ணிப் பண்றீங்களா சூர்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் சூர்யாவின் ரசிகராக இருந்தால், நிச்சயம் இந்த விஷயத்தை நீங்களும் கவனித்திருப்பீர்கள். ஆம், சமீபகாலமாக சூர்யாவின் படத் தலைப்புகளில் எண்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

திரையில் கண்ணியமான வேடம் மட்டுமின்றி, சமூகத்திலும் நல்மதிப்புடன் வலம் வருபவர் சூர்யா. இவரது கடந்த மற்றும் வருங்கால படங்களில் அதிகம் எண்களாகவே உள்ளன.


இது நியூமராலஜி பார்த்து இவ்வாறு வைக்கப்படுகிறதா அல்லது இயல்பாகவே இவ்வாறு அமைந்து விடுகிறதா எனத் தெரியவில்லை.


2டி

2டி

இதுதான் சூர்யா ஆரம்பித்துள்ள பட நிறுவனம். இதன் பெயரில் பாருங்கள் 2 என்ற எண் இருக்கிறது.


36 வயதினிலே...

36 வயதினிலே...

சூர்யா தனது படத்தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் முதலில் தயாரித்த படம் 36 வயதினிலே. நீண்ட காலத்திற்குப் பிறகு ஜோதிகா மீண்டும் திரையில் தோன்றிய இப்படம் நல்ல வசூலைத் தந்தது. இதில் 36 என்ற எண் உள்ளது.


பசங்க 2...

பசங்க 2...

அதனைத் தொடர்ந்து சூர்யா தயாரித்து, நடித்த பசங்க 2 படமும் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பட இயக்குநர் பாண்டிராஜுக்கு கார் கூட வாங்கிப் பரிசளித்தார் சூர்யா.


எண்கள் செய்யும் மாயம்...

எண்கள் செய்யும் மாயம்...

இந்த மூன்றிலும் நாம் பார்க்கும் பொதுவான அம்சம், எண்கள். ஆம், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 2டி. அவர் முதலில் தயாரித்த படத்தின் பெயர் 36 வயதினிலே. சூர்யா நடிப்பில் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பசங்க-2.


எஸ்.3...

எஸ்.3...

இது தவிர சூர்யா 24 என்ற படத்திலும், ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3-யிலும் நடித்து வருகிறார். இவற்றில் தவறாமல் எண்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...


சூ-ர்-யா.. அட இதலயும் "3" எழுத்து வருது பாஸ்!


English summary
We all know that the film industry has a lot of belief systems that could range from numerology faiths to Thursday sentiments. Therefore, it came across as an interesting coincidence looking at the titles of films which Suriya has been associated with in the recent past.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil