»   »  கிருஸ்துமஸ் விடுமுறைக்கு பசங்க 2 ரிலீஸ்... தள்ளிப்போனதன் காரணம் இதுதானாம்

கிருஸ்துமஸ் விடுமுறைக்கு பசங்க 2 ரிலீஸ்... தள்ளிப்போனதன் காரணம் இதுதானாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் 4ம் தேதி சிவகார்த்திக்கேயன் நடித்த ரஜினி முருகன் வெளியாவதால், அத்தேதியில் வெளியாக இருந்த சூர்யாவின் 'பசங்க 2' திரைப்படம் டிசம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார்.


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். இறுதிகட்டப் பணிகள், சென்சார் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால், டிசம்பர் 4ம் தேதி வெளியீடு என்று அறிவித்தார்கள்.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

சிவகார்த்திக்கேயன் நடித்த 'ரஜினி முருகன்' வெளியீட்டிற்கான அனைத்து பிரச்சினைகளும் முடிந்து டிசம்பர் 4ம் தேதி வெளியீட்டிற்கு முயற்சி செய்தார்கள்.


பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

'ரஜினி முருகன்' படத்தைப் பார்த்த பிரபல பைனான்சியர் 'ரஜினி முருகன்' தனியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று 'பசங்க 2' படத்தை வெளியிடுபவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.


கிருஸ்துமஸ் விடுமுறையில்

கிருஸ்துமஸ் விடுமுறையில்

அப்பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு 'பசங்க 2' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியீட்டிற்கு மாற்றி அமைத்திருக்கிறார்கள்.


டிசம்பர் 4ல் வெளியாகும் படங்கள்

டிசம்பர் 4ல் வெளியாகும் படங்கள்

இது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் டிசம்பர் 4ம் தேதி அதர்வா நடித்துள்ள ஈட்டி, உறுமீன் உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றன. திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவேதான் சூர்யாவின் பசங்க 2 திரைப்பட ரிலீஸை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


உறுமீன்

உறுமீன்

டிசம்பர் 4ஆம் தேதி ரேஸில் உறுமீன் படமும் இணைந்துள்ளது. பாபிசிம்ஹா, ரேஷ்மிமேனன் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்யவுள்ள 'உறுமீன்; படத்தை சக்திவேல் பெரியசாமி இயக்கியுள்ளார்.


English summary
The release date of director Pandiraj's upcoming movie Pasanga 2, has been pushed to December 24th from earlier scheduled December 4th. Starring three kids Kavin, Nayana along with actors Suriya, Amala Paul, Bindu Madhavi, Karthik Kumar and Vidhya in the key roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil