என்னங்க இப்படி இருக்கீங்க...சூர்யாவையே மிரள வைத்த மாதவன்...அப்படி செய்திருக்கிறார் பாருங்க

சென்னை : மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான மாதவன், பெண் ரசிகைகளின் ட்ரீம் பாயாக விலம் வந்தார். சாக்லேட் பாய் கேரக்டர்களிலேயே அதிகம் நடித்ததால் இவர் பலரின் ஃபேவரைட்.

Recommended Video

Surya | Madhavan-னை பார்த்து திகைத்து போன Suriya | Rocketary *TamilNadu | Oneindia Tamil

பிறகு இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்த மாதவன் ஆங்கில படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பிறகு தனது நடிப்பு மற்றும் ஆக்ஷன் திறமைகளை காட்டும் படங்களில் நடிக்க துவங்கினார்.

கடைசியாக தமிழில் இவர் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. தற்போது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தின் மூலம் டைரக்டராகவும் அறிமுகமாக உள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படமான இதை மாதவனே இயக்கி, நடித்துள்ளார்.

சர்ச்சையான மாதவனின் பேச்சு

சர்ச்சையான மாதவனின் பேச்சு

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் ஜுலை 1 ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த மிரஸ் மீட்டில் பஞ்சாங்கம் பற்றி மாதவன் பேசியது பெரும் சர்ச்சையானது. பிறகு அதற்காக தானே மன்னிப்பும் கேட்டார் மாதவன். ஆனால் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் தொடர்ந்து மாதவனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

 மீண்டும் கெஸ்ட் ரோலில் சூர்யா

மீண்டும் கெஸ்ட் ரோலில் சூர்யா

கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து ராக்கெட்ரி படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படம் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் தமிழ் வெர்சனில் சூர்யாவும், இந்தி வெர்சனில் ஷாருக்கானும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டன. படத்தில் மாதவன் நம்பி நாராயணன் ரோலிலும், அவரது மனைவி ரோலில் சிம்ரனும் நடித்திருக்கிறார்கள்.

 மாதனை பார்த்து ஷாக்கான சூர்யா

மாதனை பார்த்து ஷாக்கான சூர்யா

இந்த சமயத்தில் ராக்கெட்ரி படத்தில் தனது ரோலில் நடிப்பதற்காக சூர்யா, ராக்கெட்ரி பட செட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் இருந்துள்ளார். அவருடன் சூர்யா கைகுலுக்கி பேசிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் அச்சு அசலாக நம்பி நாராயணன் கெட்அப்பில் ஒருவர் வந்து சூர்யாவை கட்டிபிடித்து வரவேற்றுள்ளார். அவர் யாரென புரியாமல் சூர்யா ஒரு நிமிடம் ஷாக்காகி நின்றுள்ளார்.

சூர்யாவின் ரியாக்ஷனை பாருங்க

சூர்யாவின் ரியாக்ஷனை பாருங்க

இதைப் புரிந்து கொண்டு, தான் மாதவன் என்பதை அவரே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அச்சு அசலாக நம்பி நாராயணனாக மாறி இருந்த மாதவனை பார்த்து சூர்யா தலையில் கை வைத்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நம்பி நாராயணனின் நிஜ மற்றும் நிழல் உருவங்களை ஒன்றாக பார்த்த அதிர்ச்சியில் சூர்யா ஷாக்காகி நிற்கும் வீடியோ தற்போது வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

சூர்யாவையே மிரள வச்சிருக்காரே

தமிழ் சினிமாவில் இது போல் அடையாளம் தெரியாமல் கெட்அப் மாற்ற ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அவர்களில் சூர்யாவும் ஒருவர். ஆணழகன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் மொத்தமாக அடையாளமே தெரியாத அளவிற்கு கெட்அப்பை மாற்றி நடித்தவர். அப்படிப்பட்ட சூர்யாவையே மாதவனை மிரள வைத்து விட்டாரே என நெட்டிசன்கள் இந்த வீடியோவை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X