சூர்யாவின் அடுத்த சம்பவம் லோடிங்...ஆனா இது ரோலக்சையே மிஞ்ச போகுது
சென்னை : தனது அற்புதமான நடிப்பால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு நடிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறார் சூர்யா. அதுவும் எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
சூர்யா தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருப்பது 2016 ல் அவர் நடித்த 24 படம் தான். விக்ரம் குமார் இயக்கிய இந்த படத்தில் தான் சூர்யா முதல் முறையாக நெகடிவ் ரோலில் நடித்தார்.அதோடு இந்த படத்தில் தான் சூர்யா பல விதமான லுக்குகளில் தோன்றி நடித்தார்.

விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் ரோலுக்கு ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து டைரக்டர் விக்ரம் குமார், 24 படத்தின் இரண்டாம் பாகத்தை முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இதில் சூர்யா நடிக்கும் ரோல் பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவலின்படி, 24 படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இரட்டை பிறவிகளில் ஒருவர் ஹீரோ, ஒருவர் வில்லன் என வாலி அஜித் ஸ்டைலில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 24 படத்தில் சூர்யா நடித்த ஆத்ரேயா கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோய் விட்டதால் அதை அடிப்படையாக வைத்தே இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
24 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையையும் விக்ரம் குமார் தயார் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.விரைவில் விக்ரம் குமார், சூர்யாவை சந்தித்து இதுபற்றி பேச முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைம் டிராவல் வாட்ச் வைத்து அண்ணன் - தம்பிக்கு இடையே நடக்கும் சண்டை தான் 24 படத்தின் கதை. இதில் சமந்தா, நித்யா மேனன் இருவரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கும் வணங்கான், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் விரைவிலேயே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு அவகாசம் தேவைப்படுவதால் அதற்கு முன் சிறுத்தை சிவா படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











