»   »  அனல் பறக்கும் சூர்யாவின் 'எஸ்-3' டீசர் ரிலீஸ் !

அனல் பறக்கும் சூர்யாவின் 'எஸ்-3' டீசர் ரிலீஸ் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா-ஹரியின் கூட்டணியில் உருவாகி வரும் சிங்கம் 3 படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எஸ் 3. ஏற்கனவே சூர்யா - ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தை தொடர்ந்து இது சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Suriya's S3 teaser released on Monday

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக

நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 16 ஆம் தேதி 'எஸ்3' உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசர் 1 நிமிடம் 24 நொடிகள் கொண்டது.

அனல் பறக்க ஆக்ஷன் டீசராக உருவாகியுள்ள எஸ் 3 டீசர் இதோ...

English summary
Suriya's S3 Official Teaser Released on Monday

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil