»   »  "எஸ். 3"... இப்ப எப்டி "மாஸ்" சூர்யாவுக்கு வில்லன் "மார்ஸ்"ல இருந்து வருவாரா பாஸ்?

"எஸ். 3"... இப்ப எப்டி "மாஸ்" சூர்யாவுக்கு வில்லன் "மார்ஸ்"ல இருந்து வருவாரா பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3யில் தற்போது சூர்யா நடித்து வருகிறார்.

முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஹரியே இயக்குகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஸ்ருதி நடிக்க இருக்கிறார்.

உள்ளூர் தாதா...

உள்ளூர் தாதா...

சிங்கம் படத்தில் உள்ளூர் தாதாவான பிரகாஷ்ராஜை எதிர்த்து போராடுவார் சூர்யா. அப்போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை.

உலக தாதா...

உலக தாதா...

இரண்டாம் பாகத்தில் சர்வதேச அளவிலான போதைக் கும்பலை அடக்கி ஒடுக்கி கைது செய்வார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு இரண்டு நாயகிகள் ஜோடியாக நடித்திருந்தனர்.

எஸ்.3...

எஸ்.3...

தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகப் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு எஸ்.3 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வில்லன்களுடன் மோதி விட்டதால், இப்படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வேற்றுகிரகவாசி...

வேற்றுகிரகவாசி...

ஒருவேளை இம்முறை சூர்யாவின் வில்லன் பூமியைத் தாண்டி செவ்வாய்கிரகத்தில் இருந்து வருவாரோ என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வேற்றுக்கிரகவாசிகள் தான் இம்முறை ஹரியின் டார்கெட்டாக இருக்குமோ என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தலைப்பும் வித்தியாசம்...

தலைப்பும் வித்தியாசம்...

அதற்குத் தக்க எஸ்.3 எனப் படத்திற்கும் வித்தியாசமாகப் பெயரிட்டுள்ளார் ஹரி. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 2.0 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.3யும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The third installment in the “Singam” franchise, starring Suriya as a police officer, has been officially titled “S3”, the makers announced on Thursday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil