»   »  கண்டம் விட்டுக் கண்டம் "பாயும்" சிங்கம்- 3

கண்டம் விட்டுக் கண்டம் "பாயும்" சிங்கம்- 3

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 2 படத்தின் மூலம் ஆப்ரிக்கா வரை சென்று வந்த நடிகர் சூர்யா, தற்போது சிங்கம் 3 படத்தின் மூலம் மேலும் 2 கண்டங்களுக்கு செல்லவிருக்கிறார்.

சிங்கம் மற்றும் சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர் நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஹரியும்.

நவம்பர் மாதத்தில் இருந்து சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கின்றது தற்போது நடித்துவரும் 24 படத்தைத் தொடர்ந்து சிங்கம் 3 மூலம் மீண்டும் துரை சிங்கமாக மாறவிருக்கிறார் சூர்யா.

சிங்கம் & சிங்கம் 2

சிங்கம் & சிங்கம் 2

சிங்கம் படத்தில் துரைசிங்கம் என்னும் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, படத்தின் மாபெரும் வெற்றியைப் பார்த்து மீண்டும் சிங்கம் 2 படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். சிங்கம் 2 படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிங்கம் 3

சிங்கம் 3

முதல் 2 பாகங்களின் வெற்றி காரணமாக மீண்டும் சிங்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி, இதன் மூலம் தமிழில் முதன்முறையாக 3 பாகங்கள் வெளிவந்த படம் என்ற பெருமையை சிங்கம் தட்டிச் செல்லும்.

அனுஷ்கா & சுருதிஹாசன்

அனுஷ்கா & சுருதிஹாசன்

முதல் 2 பாகங்களிலும் நடித்த அனுஷ்கா தற்போது 3 வது பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார், மேலும் இந்தப் படத்தில் நடிகை சுருதிஹாசனும் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா

சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார் ஹரி. தமிழ்நாட்டில் காரைக்குடியில் வைத்து படத்தின் முக்கியமான பகுதிகளை எடுக்கவிருக்கிறாராம் ஹரி.

4 கண்டங்கள்

4 கண்டங்கள்

இந்தியா தவிர்த்து ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாரிஸ் ஆகிய 4 கண்டங்களில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கின்றது.

இந்தியாவில் ஆரம்பித்து பாரீஸில்

இந்தியாவில் ஆரம்பித்து பாரீஸில்

படத்தின் கதை இந்தியாவில் ஆரம்பித்து பாரீஸில் முடிவது போன்று திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி, இந்தப் படத்தில் சூர்யா சிபிஐ அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் என்று உறுதியற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கம் களமிறங்கிடுச்சு...

English summary
Singam 3, which features Suriya, will be shot across four continents. The team will start shooting from November.The film will be shot in India, Africa, Australia and Paris. As soon as Suriya completes shooting for Tamil thriller 24, he's expected to take a short break and join the sets of Singam 3 Sources Said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil