Just In
- 10 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 11 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 11 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 11 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜனவரி 30ம் தேதி நாடு முழுக்க உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள்.. விவசாய சங்கங்கள் அறிவிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூர்யாவின் சூரரைப் போற்று பாடல்... விமானத்தில் வெளியிடப்பட்டது 'வெய்யோன் சில்லி'
சென்னை: சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் 'வெய்யோன் சில்லி' என்ற பாடல் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெளியிடப்பட்டது.
முதல் பட்ஜெட் விமானமான, ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கியவர், பெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், 'சூரரைப் போற்று'.
இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

சுதா கொங்கரா
'துரோகி', 'இறுதிச்சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட், பரேஸ் ராவல் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழில், இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

2டி என்டர்டெயின்மென்ட்
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

விமானத்தில் இசை
இந்நிலையில், இந்தப் படத்தின் பாடலை புதுமையாக வெளியிட படக்குழவினர் திட்டமிட்டனர். விமானத்தை மையப்படுத்திய கதை என்பதால், இசை வெளியீட்டையும் விமானத்தில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, விமானத்தில் முதன் முறையாக பயணம் செய்யும் 70 குழந்தைகளை சூரியாவின் அகரம் பவுண்டேஷன் மூலம் தேர்வு செய்தனர்.

ஸ்பைஸ் ஜெட்
அவர்களை, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்ய வைத்தனர். இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சுமார் 40 நிமிடம் இந்த விமான பயணம் அமைந்தது. அந்த குழந்தைகள் இந்த அனுபவத்தால் பரவசமடைந்தனர். அவர்கள் முன்னிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, 'வெய்யோன் சில்லி எனும் பாடல் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா, ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் அஜித் சிங், ஜோதிகா, சிவகுமார், படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜோதிகா இல்லை
தம்பி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யா வந்திருந்தார். ஆனால், சூர்யாவின் சூரரைப் போற்று இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையிலும், நடிகை ஜோதிகா மற்றும் தம்பி கார்த்தி வராதது சூர்யா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி பிஸியாக நடித்து வருகிறார். சசி குமார் படத்தில் நடிகை ஜோதிகாவும் பிஸியாக இருப்பதால், இருவரும் இந்த விழாவுக்கு வருகை தர இயலவில்லை.