அடிதூள்...மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் வாடிவாசல்...அப்டேட் எப்போ வருது தெரியுமா ?

சென்னை : எத்தனை படங்களில் கமிட்டாகி உள்ளார் என புரியாமல் அவரே குழம்பிப் போகும் அளவிற்கு ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.

பாலாவுடன் சூர்யா 41, வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கும் படம், விக்ரம் 3, சிறுத்தை சிவா இயக்கும் படம், அயலான் டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் படம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

இவை போதாது என்று கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் கெஸ்ட் பெர்ஃபான்ஸ் கொடுத்தது போல், மாதவனின் ராக்கெட்ரி படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இன்னும் சில படங்கள் சூர்யாவின் கெஸ்ட் ரோலை ரகசியமாக வைத்திருப்பதாக வேறு கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

டிரெண்டிங்கில் சூர்யா குடும்ப போட்டோ

டிரெண்டிங்கில் சூர்யா குடும்ப போட்டோ

டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியை தொடர்ந்து கோவாவில் ஜுலை மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது. இதற்கிடையில் வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறார் சூர்யா. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் குடும்பத்தை கூட்டிக் கொண்டு அமெரிக்காவில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். இந்த போட்டோ, வீடியோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

என்னது வாடிவாசல் தள்ளி போகுதா

என்னது வாடிவாசல் தள்ளி போகுதா

டைரக்டர் வெற்றிமாறன், விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் இரு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக வேறு கூறப்படுகிறது. இதை முடித்த பிறகு ஜுனியர் என்டிஆரை வைத்து தெலுங்கு படம், ரஜினியுடன் ஒரு படம், விஜய்யுடன் ஒரு படம் என வரிசையாக படங்களை இயக்க உள்ளதால் வாடிவாசல் படம் தள்ளி போவதாக வதந்திகள் பரவியது.

வாடிவாசல் ஷுட்டிங் எப்போ

வாடிவாசல் ஷுட்டிங் எப்போ

ஆனால் விடுதலை படத்தை தொடர்ந்து, வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க போகிறாராம். இந்த படத்தை முடித்த பிறகு தான் ஜுனியர் என்டிஆர் உடனான தெலுங்கு படத்தை இயக்க போவதாக மற்றொரு தகவல் கூறுகிறது. வாடிவாசல் படத்தின் ஃபிரிமினரி போட்டோஷுட் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஷுட்டிங்கை துவக்க போவதாக கூறப்படுகிறது.

ஆஹா செம பிளானா இருக்கே

ஆஹா செம பிளானா இருக்கே

இதற்கிடையில் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றும் ட்ரீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை மாதத்தில் வாடிவாசல் படத்தின் முதல் க்ளிம்ப்சை வெளியிட போகிறாரா்களாம். கடந்த ஆண்டு சூர்யா பிறந்தநாளன்று எதற்கும் துணிந்தவன் டீம் படத்தின் டீசரை வெளியிட்டது. அது போல இந்த முறை வாடிவாசல் டீம் முடிவு செய்திருக்கிறதாம்.

இதெல்லாம் எப்போ பண்ணுனீங்க

இதெல்லாம் எப்போ பண்ணுனீங்க

வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்சிற்கான ஸ்டில்களை, ப்ரிலிமினரி போட்டோஷுட் நடத்திய போது சேர்த்தே எடுத்து விட்டார்களாம். ஆனால் சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 23 ம் தேதி வெளியிடுகிறார்களா அல்லது ஜுலை 22 ம் தேதியே வெளியிடுகிறார்களா என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லையாம்.

 மாஸ் கொண்டாட்டம் காத்திருக்கு போலவே

மாஸ் கொண்டாட்டம் காத்திருக்கு போலவே

விஜய்யின் பிறந்தநாளன்று வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில், செகண்ட் மற்றும் மூன்றாவது லுக்குகள் வெளியிடப்பட்டு, விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சற்று ஓய்ந்துள்ளன. இதே போல் சூர்யா பிறந்த நாளையும் கொண்டாட போகிறார்களாம். வாடிவாசல் டீம் மட்டுமல்ல விக்ரம் 3, சூர்யா 41 படக்குழுக்களும் சூர்யா பிறந்தநாளன்று அப்டேட் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அன்று கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X