»   »  நான் பப்ளிசிட்டி தேடுறேனா?: பீட்டாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சூர்யா #Jallikattu

நான் பப்ளிசிட்டி தேடுறேனா?: பீட்டாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சூர்யா #Jallikattu

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சி3 படத்திற்கு விளம்பரம் தேட ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்கக் கோரி நடிகர் சூர்யா பீட்டா அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.

Suriya sends legal notice to PETA

இந்நிலையில் சூர்யா சி3 படத்திற்கு விளம்பரம் தேடவே ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பீட்டா இந்தியா அமைப்பு தெரிவித்தது. இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து பீட்டா அமைப்பை சமூக வலைதளங்களில் விளாசிவிட்டனர்.

தன்னை விமர்சித்த பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரி சூர்யா நோட்டீஸ் அனுப்புயிள்ளார். சூர்யா சார்பில் அவரது வழக்கறிஞர் விஜய் ஆனந்த் நோட்டீஸை அனுப்பி வைத்துள்ளார்.

பீட்டா அமைப்பு 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Suriya has sent legal notice to PETA which criticised him of supporting Jallikattu just for the sake of seeking publicity for his upcoming movie C3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil