For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “ராக்கெட்ரி“ கிளைமாக்ஸில் செம ட்விஸ்ட்.. யோசிச்சு கூட பாக்கமுடியால.. மாதவனை புகழ்ந்த சூர்யா !

  |

  சென்னை : நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்"படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் சூர்யா, மாதவனை புகழ்ந்து பேசியள்ளார்.

  Recommended Video

  Surya Madhavan live | Rocketry | Celebrity | Filmibeat Tamil

  இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

  இயக்குநராக தனது முதல் படத்திலேயே ரிஸ்க்கான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ள மாதவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

  விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

  இஸ்ரோ நம்பி நாராயணன்

  இஸ்ரோ நம்பி நாராயணன்

  இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகியதை அடுத்து நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கினார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டது.

  நம்பி நாராயணனாக மாறிய மாதவன்

  நம்பி நாராயணனாக மாறிய மாதவன்

  நம்பி நாராயணனாக நடித்துள்ள மாதவன் 79 வயதான நம்பி நாராயணனின் தோற்றத்தை அடைய மேக்கப், பல், முக அம்சங்களையும் கூட மாற்றினார். நாராயணனின் 29 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பங்களை இப்படம் சொல்வதால், தனது கதாபாத்திரத்தை வெவ்வேறு காலகட்டங்களில் சித்தரிக்க உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் உள்ளார் மாதவன்.

  மாஸ் வசனம்

  மாஸ் வசனம்

  இப்படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அதாவது நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் துணிச்சல் மிகுந்த செய்தியாளராக நடித்துள்ளார். படத்தில் "ஒரு நாயை அடித்து கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா அதுக்கு வெறிநாய்னு பட்டம் கொடுத்தால்‘‘ என்று அவர் பேசிய வசனம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கேரக்டரில் கடைசி ஐந்து நிமிடம் மிரட்டிய சூர்யா கதாபாத்திரம் போல இந்த கதாபாத்திரும் பேசப்பட்டு வருகிறது.

  மாதவனை பாராட்டிய சூர்யா

  இந்நிலையில்,இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் வீடியோ கான்பிரன்சில் ராக்கெட்ரி படம் குறித்து பேசினார்கள். அப்போது பேசிய சூர்யா, நீங்க சொன்ன பதிலை வைத்துதான் நம்பி நாராயணனுக்கு என்ன ஆச்சு, என்ன நடத்துட்டு இருக்கு அவரது வாழ்க்கையிலேனு நான் யோசிக்க ஆரம்பித்தேன். இந்த படத்திற்காக பெரிசா எந்த ஒத்திகையும் நாம பாக்கல, இயல்பா சூர்யா எப்படி இருப்பாரோ அப்படி நடிச்சா போதும்னு சொன்னது உண்மையிலேயே வேறமாதிரி இருந்தது என்றார்.

  செம ட்விஸ்ட்

  செம ட்விஸ்ட்

  தொடர்ந்து பேசிய சூர்யா, கிளைமாக்ஸில் நீங்க கொடுத்த ட்விஸ்ட் யாருமே எதிர்பார்க்கல. நிறைய பயோபிக் படங்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், கிளைமாக்ஸில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியுமா ? இந்த மனுஷன் எப்படி யோசிச்சி இருப்பாருனு நிறைய கேள்விகள் மனதிற்குள் தோன்றி தூக்கிவாரி போட்டது என்று நடிகர் சூர்யா, மாதவனை புகழ்ந்து பேசினார்.

  English summary
  Suriya Shares About Rocketry Movie With Madhavan
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X