twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட ’ரோலக்ஸ்’ சூர்யாவுக்குள் இப்படி ஒரு சிந்தனையா..விருமன் விழாவில் அசத்தல் பேச்சு!

    |

    சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன்.

    Recommended Video

    Karthi Speech | விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு... Viruman Success meet *Kollywood

    இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது.

    வசூலிலும் சிறப்பான சாதனைகளை இந்தப் படம் தொடர்ந்து படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

    வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்! வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்!

    விருமன் படம்

    விருமன் படம்

    நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, மனோஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகி குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது விருமன். இந்தப் படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள நிலையில் கிராமத்து கதைக்களத்தில் படம் ரிலீசாகியுள்ளது.

    விருமன் படத்தின் வசூல்வேட்டை

    விருமன் படத்தின் வசூல்வேட்டை

    இந்தப் படம் கடந்த 5 நாட்களில் சிறப்பான வசூலை பெற்று முன்னணியில் காணப்படுகிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து இந்தப் படத்தின் இரவு நேரக் காட்சிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளன. இரவு நேரக் காட்சிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

     குடும்ப உறவுகளை அரவணைக்கும் கார்த்தி

    குடும்ப உறவுகளை அரவணைக்கும் கார்த்தி

    படத்தில் குடும்ப உறவுகளை போற்றும் அரவணைத்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. படத்தின் சண்டைக் காட்சிகளும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டவர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

    நடிகை அதீதி ஷங்கர்

    நடிகை அதீதி ஷங்கர்

    இந்தப் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர். அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் விசில் மழை பொழிந்து வருகின்றனர். அந்தவகையில் முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது உடல்மொழி படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பாடகியாக அறிமுகம்

    பாடகியாக அறிமுகம்

    கார்த்தியை மிரட்டுவதிலாகட்டும், அக்காவிற்காக மெனக்கெடுவதிலாகட்டும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதீதி. பாடல்காட்சிகளிலும் சிறப்பான நடனத்தின்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மதுர வீரன் பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

    விருமன் சக்சஸ் மீட்

    விருமன் சக்சஸ் மீட்

    இதனிடையே இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, அதீதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.

    பெண்கள் குறித்து நெகிழ்ச்சி

    பெண்கள் குறித்து நெகிழ்ச்சி

    நிகழ்ச்சியில் மிகுந்த கரகோஷத்திற்கிடையே சூர்யா பேசினார். அப்போது குடும்ப உறவுகள் மற்றும் அதில் பெண்களின் பங்கு குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்களின் தியாகம் விட்டுகொடுத்தல் குறித்து அழகாக சொன்னார். தொடர்ந்து தங்களுடைய வேலைகளை சிறப்பாக செய்ய தங்களது வீட்டு பெண்களே காரணம்னும் அவர் பேசினார். எங்க ரெண்டு பேருக்கும் அவங்கதான் பலம்னும் பெருமையாக பேசினார்.

    கைத்தூக்கிவிட்ட வீட்டு பெண்கள்

    கைத்தூக்கிவிட்ட வீட்டு பெண்கள்

    தங்கள் இருவரையும் கைத்தூக்கி விடுவது மற்றும் மேலே தூக்கி விடுவது தங்களது குடும்பத்தின் பெண்கள்தான் என்றும் தன்னுடைய அம்மா, மனைவி, மகள் ஆகியோர் எவ்வளவு தியாகங்களை செய்கிறார்கள் என்று தெரியும் என்றும் குறிபிட்டார். ஒரு ஆண் ஜெயிப்பது மிகவும் சுலபம் என்றும் அதுவே ஒரு பெண் ஜெயிக்க 40 மடங்கு சிரமப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    சொர்க்கம் குறித்து சொன்ன பிருந்தா

    சொர்க்கம் குறித்து சொன்ன பிருந்தா

    தன்னுடைய வீட்டின் மகனை முன்னிறுத்திவிட்டு பெண்கள் பின்தங்குவதாகவும் சூர்யா குறிப்பிட்டார். தன்னுடைய தங்கை பிருந்தா சொன்ன விஷயத்தையும் அவர் இந்த பேச்சின்போது நினைவுகூர்ந்தார். தங்களுக்கு சொர்க்கம் என்றால், அது தாங்கள் சாப்பிட்ட தட்டை வேறு ஒருவர் கழுவுவதுதான் என்று பிருந்தா கூறியதை குறிப்பிட்ட சூர்யா, பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருவதாகவும் அதை ஆண்கள் புரிந்துக் கொண்டு அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும் என்றும் அவர் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

    English summary
    Actor Suriya speech about women in Viruman success meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X