இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று... ஹீரோ யாரு ?

சென்னை : சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் கடந்த ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளரான சூர்யா முடிவு செய்தார்.

தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஒடிடி.,யில் திரையிடப்பட்டாலும் இந்த படம் உலக அரங்கில் பெரும் அங்கீகாரத்தை பெற்று விட்டது. சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்ட சூரரை போற்று படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச அங்கீகாரம்

அதைத் தொடர்ந்து ஆஸ்கார் போட்டிக்குள்ளும் நுழைந்தது சூரரை போற்று. சர்வதேச திரைப்படங்களுக்கு ஐஎம்டிபி., வழங்கிய ரேட்டிங்கில் சூரரை போற்று 3 வது இடத்தை பிடித்தது. இந்த கவுரவத்தை பெற்ற முதல் இந்திய திரைப்படம் சூரரை போற்று தான்.

கேப்டன் கோபிநாத் வாழ்க்கை படம்

கேப்டன் கோபிநாத் வாழ்க்கை படம்

ஏர் டெக்கன் நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் மாறா என்ற நெடுமாறன் ராஜாங்கம் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்பதை மையக் கருத்தாக கொண்ட இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பர்வேஷ் ராவல், கர்ணாஸ், காளி வெங்கட், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

 இந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று

இந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று

தற்போது இந்த படத்தை தானே இந்தியில் ரீமேக் செய்ய போவதாக சுதா கொங்கரா அறிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவின் அபுதந்தியா என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளன.

சூர்யாவே இந்தியிலும் நடிக்கிறாரா

சூர்யாவே இந்தியிலும் நடிக்கிறாரா

இந்தி ரீமேக்கில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், இந்தியிலும் சூர்யா தான் ஹீரோவா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அதிக ரீமேக் படங்களில் நடித்தவர் என்ற முறையில் அஜய் தேவ்கன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

யாரு ஹீரோ

யாரு ஹீரோ

இவர் தவிர ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், அக்ஷய் குமார், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோரின் பெயர்களும் சூர்யா நடித்த மாறா கேரக்டரில் நடிக்க பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழுக்கு கிடைத்த அதே ஆதரவு, இந்தி ரீமேக்கிற்கும் கிடைக்கும் என சுதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X