மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி… ஷூட்டிங் தேதியை முடிவு செய்த சூர்யா?

சென்னை: சூர்யா தற்போது 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 42 படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசலில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

சூரரைப் போற்று கூட்டணி

சூரரைப் போற்று கூட்டணி

சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் சமீபத்தில் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியிருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை பின்னனியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யாவிற்கு சிறந்த நடிகர், அபர்ணாவுக்கு சிறந்த நடிகை, ஜிவி பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் உட்பட மொத்தம் 5 விருதுகளை சூரரைப் போற்று வென்று கொடுத்தது. இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு ஷூட்டிங்

அடுத்தாண்டு ஷூட்டிங்

சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி வெர்ஷனை இயக்கி வருகிறார். அக்‌ஷய்குமார் நடித்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் மீண்டும் இணையவுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. அதன்படி, இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் சூர்யா 42, அடுத்து வாடிவாசல் படங்களில் நடித்து முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம்.

சூர்யா 42

சூர்யா 42

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும், அதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களும் மார்ச் மாதத்திற்கு முன்பு முடிந்துவிடுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சூர்யா 42 ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

அதேபோல், வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பையும் உடனே முடித்துவிடுவாரா எனத் தெரியவில்லை. அதேநேரம் சுதா கொங்கராவும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோம்பல ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகின. இதனிடையே சூர்யா - சுதா கூட்டணி மார்ச் மாதம் தங்களது படத்தை தொடங்கிவிடலாம் என கணக்குப் போட்டு வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X