பாலா பட ஷுட்டிங்கிலிருந்து அவசரமாக வெளியேறிய சூர்யா... காரணம் இது தானா?
சென்னை : பாலா இயக்கும் சூர்யா 41 ஷுட்டிங்கில் பிஸியாக நடித்து வந்த சூர்யா, இன்று திடீரென அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி உள்ளார். சூர்யாவை விமான நிலையத்தில் பார்த்தவர்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். ஆனால் இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளதாம்.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்டு, காளைகளை அடக்கி வந்தார் சூர்யா. தொடர்ந்து காளைகளுடன் பழகியும் வருகிறார் சூர்யா. இதற்கிடையில் பாலா இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

சூர்யா 41 ஷுட்டிங்
சூர்யா - பாலா இணையும் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.இசையமைக்கிறார். ஜுன் மாத இறுதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என சூர்யா சொல்லி விட்டதால் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

ஃபர்ஸ்ட்லுக் எப்போ
இது வழக்கமான பாலா படமாக இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் வெளிநாட்டினர் சிலர் கலந்து கொள்ள ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 1 ம் தேதி ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அவசரமாக கிளம்பிய சூர்யா
கன்னியாகுமரியில் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்த சூர்யா, இன்று திடீரென அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். சூர்யாவை விமான நிலையத்தில் பார்த்தவர்கள், சூர்யா பிரேக் எடுத்துக் கொண்டாரா அல்லது படத்தில் அவர் நடிக்கும் சீன்களை எடுத்து முடித்து விட்டார்களா என அனைவரும் என கேட்க துவங்கி விட்டனர். வாடிவாசல் படத்தின் இரண்டாம் கட்ட டெஸ்ட் ஷுட்டில் சூர்யா விரைவில் கலந்து கொள்ள உள்ளதால் தான் பாலா படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை சீக்கிரம் முடித்து விட்டு சூர்யா சென்னைக்கு திரும்பி விட்டார் என தகவல் பரவியது.

சூர்யா எங்கே போயிருக்கார் பாருங்க
சூர்யா அவசரமாக ஷுட்டிங்கில் இருந்து கிளம்பி வந்தது உண்மை தான். ஆனால் சென்னைக்கு வரவில்லை. சூர்யா இன்று அவசரமாக மும்பை சென்றுள்ளார். சூர்யா மற்றும் ராஜ்சேகர் பாண்டியன் இருவரும் மும்பை- அந்தேரி பகுதியில் உள்ள, பாகி மற்றும் 83 படங்களின் தயாரிப்பாளர் சாஜித் நடியாத்வாலாவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video

பெரிய பிளானா இருக்கும் போலவே
2டி தயாரிப்பு நிறுவனம், சாஜித் நடியாத்வாலா நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் எதையாவது தயாரிக்க போகிறதா அல்லது சூர்யா பாலிவுட் படத்தில் நடிக்க போகிறாரா அல்லது பாலிவுட் படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க போகிறதா என தெரியவில்லை. ஆனால் பெரிதாக எதையோ பிளான் செய்கிறார்கள். இல்லாவிட்டால் சூர்யா அவசரமாக மும்பை வந்திருக்க மாட்டார் என சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











