»   »  இளையராஜா-எஸ்.பி.பி. பிரச்சனை இருக்கும்போது சூர்யா இப்படி சொல்லியிருக்கிறாரே!

இளையராஜா-எஸ்.பி.பி. பிரச்சனை இருக்கும்போது சூர்யா இப்படி சொல்லியிருக்கிறாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஹ்மான் சாரும், மணி சாரும் 25 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பது அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். கருத்து வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையாக இருப்பது எங்களுக்கு எல்லாம் பாடமாக உள்ளது என சூர்யா தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசியதாவது,


கார்த்தி

கார்த்தி

ஆயுத எழுத்து படத்தில் நான் நடித்தபோது உதவி இயக்குனராக கூட்டத்தை விலக்கிவிட்ட கார்த்தி மணி சார் இயக்கத்தில் நடிச்சுட்டான்கிறது பெரிய சாதனை.


ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

காற்று வெளியிடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கார்த்தியை பார்த்து நான் மட்டும் அல்ல மொத்த குடும்பமுமே ஆச்சரியப் பட்டோம். இது கார்த்தியா என்று எங்களாலேயே நம்ப முடியவில்லை.


பொண்டாட்டி

பொண்டாட்டி

மணி சார், நான் இன்னும் வீட்டில் பொண்டாட்டி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். பொண்டாட்டி வா, போ என்று தான் அழைக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எப்படி எனர்ஜியை எடுத்து வருகிறீர்கள், காதல், ரொமான்ஸ் பற்றி புதுசு புதுசா எங்கிருந்து ஐடியாக்கள் வருது, உங்களின் ரகசியம் என்ன என்று கேட்க ஒரு ஆசை.


ரஹ்மான்

ரஹ்மான்

ரஹ்மான் சாரும், மணி சாரும் 25 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பது அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். கருத்து வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையாக இருப்பது எங்களுக்கு எல்லாம் பாடமாக உள்ளது. இரண்டு திறமைசாலிகள் ஒன்றாக இருந்து நிறைய சாதிக்கலாம் என்று தெரிந்து கொண்டோம் என்றார் சூர்யா.


இளையராஜா

இளையராஜா

பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இசைஞானி இளையராஜாவுக்கும், பாடகர் எஸ்.பி.பி. பாலசுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சூர்யா இரண்டு திறமைசாலிகளின் ஒற்றுமை குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Actor Suriya attended the audio launch of his brother Karthi's upcoming movie Kaatru Veliyidai. He said that two talented people working together for years is an inspiration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil