சூர்யா எனக்கு காருக்குள்ள 4 மணி நேரம் ஆக்டிங் class எடுத்தார்!

சென்னை : தெலுங்கில் மிக பிரபலமான நடிகராக உள்ள ராணா தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்

அஜித்துடன் இணைந்து ஆரம்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்

பாகுபலியால் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகர் ராணா சூர்யா தனக்கு காருக்குள்ளே 4 மணி நேரம் ஆக்டிங் கிளாஸ் எடுத்ததாக பகிர்ந்துள்ளார்.

மிரட்டும் வில்லனாக

மிரட்டும் வில்லனாக

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் ராணா. ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லனாகவும் மிரட்டும் ராணா பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறி உள்ளார். லீடர் என்ற படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ராணாவுக்கு அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

தமிழிலும் நேரடியாக சில திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார். அந்த வகையில் அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பல்லாலதேவா கதாபாத்திரத்திற்கு

பல்லாலதேவா கதாபாத்திரத்திற்கு

இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் பல்லாலதேவனாக நடித்து இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். பாகுபலியில் ராணா வில்லனாகவே நடித்திருந்தாலும் பல்லாலதேவா கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

ரூரல் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து

ரூரல் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து

ஆரம்பம் படத்தை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி,பெங்களூரு நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, கடான் உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது சாய்பல்லவி உடன் இணைந்து விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ரூரல் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் 4 மணி நேரம் ஆக்டிங் க்ளாஸ்

சூர்யாவின் 4 மணி நேரம் ஆக்டிங் க்ளாஸ்

இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட விழாவில் பேசிய ராணா சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த படத்தை பார்த்த சூர்யா என்னை காரில் அழைத்துச் சென்று சுமார் 4 மணி நேரம் ஆக்டிங் குறித்து க்ளாஸ் எடுத்தார். சூர்யா கொடுத்த அந்த ஆக்டிங் டிப்ஸ்தான் இப்பொழுது என்னை சிறந்த நடிகனாக உங்கள் முன் நிறுத்தியுள்ளது. டேனியல் சேகர், பல்லாலதேவன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உங்களால் பார்க்க முடிகிறது என சூர்யாவுடனான பல வருட நட்பை பற்றி மேடையில் ராணா நெகிழ்ந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X