twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் மற்றும் லோகேஷை குறிப்பிட்டு திடீரென ‘ரோலக்ஸ்’ சூர்யா போட்ட ட்வீட்.. என்ன சொன்னார் தெரியுமா?

    |

    சென்னை: மார்வெல் படங்களில் வருவதை போலவே விக்ரம் படத்தில் கிட்டத்தட்ட போஸ்ட் கிரெடிட் சீனாகவே சூர்யாவின் வெறித்தனமான என்ட்ரி இருந்தது. ஆனால், எண்ட் கிரெடிட்டுக்கு சற்று முன்னரே அந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    Recommended Video

    Suriya எனக்கு பிடிக்கும்: Kamal Speech in Bangalore Vikram Movie Promotion | #Celebrity

    ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் தனது அசுரத்தனமான நடிப்பை கட்டவிழ்த்து இருக்கிறார் சூர்யா.

    விக்ரம் படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் விக்ரம் 3ஐ சீக்கிரம் எடுங்க என சொல்லி வரும் நிலையில், சூர்யா தற்போது போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவுரை சொன்ன ஸ்வேதா மோகன் - பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவுரை சொன்ன ஸ்வேதா மோகன் - பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

    வசூல் வேட்டை

    வசூல் வேட்டை

    இதுவரை இல்லாத அளவுக்கு இப்படியொரு க்ரிப்பிங்காக கமல்ஹாசன் படம் வெளியனதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக உள்ளது. முதல் நாளிலேயே இந்தியாவில் 34 கோடி வரை விக்ரம் படம் வசூல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் 20 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அமெரிக்கா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விமர்சனத்தில் வெற்றி

    விமர்சனத்தில் வெற்றி

    இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் இருந்தாலும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கியது. ஆனால், விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தான் இந்த படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் வரவும் வாய்ப்புள்ளன.

    110 கோடி பட்ஜெட்

    110 கோடி பட்ஜெட்

    ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் பட்ஜெட் 110 கோடி என கூறப்படுகிறது. பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகமாக வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர்களின் சம்பளமே பாதி பட்ஜெட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிரில்லியன்ட் ஸ்க்ரீன்பிளே தான் தியேட்டரில் ரசிகர்களை போனை நோண்ட விடாமல் பார்த்துக் கொண்டது.

    ரோலக்ஸ் என்ட்ரி

    ரோலக்ஸ் என்ட்ரி

    விஜய்சேதுபதிக்கும் மேலே இருக்கும் நபராக சூர்யா வெறித்தனமான ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களே ஸ்பாய்லர்களாக நேற்றே ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து அவரது லுக் மற்றும் காட்சிகளை ரிவீல் செய்து விட்டனர். சூர்யாவின் என்ட்ரி தான் விக்ரம் 3ம் பாகத்திற்கான லீடாக அமைந்துள்ளது. 1986ல் வந்த விக்ரம் முதல் பாகம், இப்போ வந்திருக்கும் விக்ரம் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா ட்வீட்

    சூர்யா ட்வீட்

    ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த பாகம் உருவாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். தற்போது தியேட்டரில் அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    நன்றி அண்ணா

    நன்றி அண்ணா

    அன்புக்குரிய கமல்ஹாசன் அண்ணா.. எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு என் நன்றிகள் என பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, #Rolex #Vikram என்கிற ஹாஷ்டேக்கையும் பதிவிட்டு அடுத்த பார்ட் உருவாகும் என்பதை உறுதி செய்துள்ளார்.

    English summary
    Actor Suriya tweeted heartfelt thanks note for Kamal Haasan and Lokesh Kanagaraj for Vikram movie ‘Rolex’ character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X