உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஜெகதீஷ்.. வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா!
சென்னை: சூர்யா ரசிகர் மன்ற செயலாளர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்குச் சென்று நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.
வரும் ஜூன் 3ம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் உயிரிழந்த ரசிகர்
நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் கடந்த வாரம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகரின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா ஆறுதல்
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா 41 மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என படுபிசியாக மாறியுள்ள நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஜெகதீஷ் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் மனம் வாடி உள்ளார். ஜெகதீஷ் வீட்டுக்கு சென்ற சூர்யா ரசிகரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் அஞ்சலி
நடிகர் சூர்யா ரசிகரின் வீட்டுக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அதிகப்படியாக ஷேர் செய்து ஜெகதீஷ் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ள கேமியோ கதாபாத்திரத்தை பார்க்க வேண்டும் என ரொம்பவே ஆர்வமாக இருந்த நிலையில், ஜெகதீஷ் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் சூர்யாவிடம் கூறியுள்ளனர்.

கமல் பேச்சு
விஜய் டிவியில் சிறப்பு பேட்டியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் சூர்யாவின் அப்பாவை நான் அண்ணன் என்று கூறினேன். இப்போ அவர் என்னை அண்ணன் எனக் கூறுகிறார். விக்ரம் படத்தில் மட்டுமல்ல இனி தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து பயணிப்பேன் என விக்ரம் 3 படம் வெகு விரைவாக உருவாகப் போவதை குறிப்பிட்டு இருந்தார் கமல்.

இரும்புக் கை மாயாவி
விக்ரம் 3வது பாகத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடித்தால், அந்த படத்திற்கு இரும்புக் கை மாயாவி என்கிற டைட்டில் வைக்கப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும், கமல் அமர்ந்திருக்கும் நாற்காலி மற்றும் சூர்யா வரும் காட்சியில் காட்டப்படும் நாற்காலி இரண்டுக்குமே உள்ள ஒற்றுமைகளையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











