»   »  டிஎஸ்கே ரிலீஸுக்கு முன்பு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்ற சூர்யா

டிஎஸ்கே ரிலீஸுக்கு முன்பு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்ற சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil
படம் வெளிவருதற்கு முன்பு பரிகாரம் செய்ய திருநள்ளாருக்கு சென்ற சூர்யா

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸாகும் நிலையில் சூர்யா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை ரிலீஸாக உள்ளது.

படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் நாளை வெளியாகிறது.

கேரளா

கேரளா

விஜய்யை போன்றே சூர்யாவுக்கும் கேரளாவில் ரசிகர்கள், ரசிகைகள் அதிகம். இந்நிலையில் அவர் கேரளா சென்று தனது படத்தை விளம்பரம் செய்தார். சூர்யாவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 சனி பகவான்

சனி பகவான்

அண்மையில் சனிப்பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் சூர்யா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு நேற்று சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 சாய் பல்லவி

சாய் பல்லவி

சிங்கம் 3 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் படம் தானா சேர்ந்த கூட்டம். அடுத்தாக அவர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என்று இரண்டு நாயகிகள்.

ரிலீஸ்

ரிலீஸ்

இந்த பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Suriya has visited Thirunallar Saneeswaran Temple on wednesday. His movie Thaana Serndha Koottam directed by Vignesh Shivan is hitting the screens tomorrow as Pongal special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X