“ஜெர்மன் நீங்க நினைக்குற மாதிரியான படம் இல்லை, அந்த கதை அவருக்கு தான்”: ரஞ்சித் ஓப்பன் டாக்

சென்னை: பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அவரது 61வது படத்தை பா ரஞ்சித் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், பா ரஞ்சித் தனது கனவுப் படமான 'ஜெர்மன்' குறித்தும், அதில் நடிக்கும் ஹீரோ பற்றியும் கூறியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது ஏற்படுத்திய விவாதம்

நட்சத்திரம் நகர்கிறது ஏற்படுத்திய விவாதம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது', கடந்த மாதம் இறுதியில் வெளியானது. கலையரசன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், காதல் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் சாதிய அரசியல் பற்றியும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் ரஞ்சித் வழக்கம் போல தனது அரசியலை அழுத்தமாக பேசியிருந்தார்.

விக்ரம் 61இல் இணையும் பா ரஞ்சித்

விக்ரம் 61இல் இணையும் பா ரஞ்சித்

'நட்சத்திரம் நகர்கிறது' வெளியாகும் முன்னரே பா ரஞ்சித் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில், விக்ரம் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ஜானரில் அமர்க்களமான ஆக்சன் படமாக இது உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடவும் பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா ரஞ்சித்தின் கனவுப் படம் ஜெர்மன்

பா ரஞ்சித்தின் கனவுப் படம் ஜெர்மன்

'விக்ரம் 61' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் விக்ரம் தவிர்த்து நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதனால் விரைவில் படக்குழு தரப்பில் இருந்து புதிய அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே பா ரஞ்சித்தின் கனவுப் படமான ஜெர்மன் குறித்தும் அடிக்கடி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால், 'ஜெர்மன்' திரைப்படம் எப்போது தொடங்கப்படும் எனவும் ரஞ்சித் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

ஜெர்மன் படத்தில் நடிக்கும் சூர்யா?

ஜெர்மன் படத்தில் நடிக்கும் சூர்யா?

"ஜெர்மன்' திரைப்படம் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாகவும், இதில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெறும் எனவும் பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள பா ரஞ்சித், "தற்போது ஜெர்மன் படம் குறித்து பரவிவரும் எந்த தகவல்களும் உண்மையில்லை. அது எதிர்காலம் சார்ந்த வித்தியாசமான படமாக இருக்கும். சூர்யாவிடம் அந்தக் கதையை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த காலக்கட்டத்துக்கு ஏற்றதுபோல சில மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் அது மிகப்பெரிய படமாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார். பா ரஞ்சித்தின் கனவுப் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X