»   »  'சூர்யா 36' படத்தில் மெயின் இவங்கதான்... இன்னொரு நாயகி அறிவிப்பு!

'சூர்யா 36' படத்தில் மெயின் இவங்கதான்... இன்னொரு நாயகி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யாவுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி- வீடியோ

சென்னை : நடிகர் சூர்யா தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

அடுத்து சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை புத்தாண்டு தினத்தன்று நடந்தது.

இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூர்யா 36 ஹீரோயின்

சூர்யா 36 ஹீரோயின்

'சூர்யா 36' படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. ரகுல் ப்ரீத் சிங் இதே நிறுவனம் தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரித்திசிங், தமிழில் சமீபத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்திலும் நடித்தார். இந்த நிலையில் சூர்யாவின் 36-வது படமான 'சூர்யா 36' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

ஏற்கெனவே 'சூர்யா 36' படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகியாக ரகுல் ப்ரித் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் உறுதி செய்துள்ளது.

கார்த்தி ஜோடி

கார்த்தி ஜோடி

இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திலும் ரகுல் ப்ரித் சிங்தான் ஜோடி என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து சூர்யா, கார்த்தி ஆகிய இருவருக்குமே ஜோடி ஆகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

விஜய் 62 மிஸ்ஸிங்

விஜய் 62 மிஸ்ஸிங்

முன்னதாக 'விஜய் 62' படத்தில் நடிக்க ரகுல் ப்ரித் சிங்கிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் சென்டிமென்ட் பார்த்து, விஜய்யிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதனால் அந்தப் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

பொங்கல் முதல் ஷூட்டிங்

பொங்கல் முதல் ஷூட்டிங்

ஜனவரி 1 முதல் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Suriya is currently busy with the promotion of the movie 'Thaana serndha koottam'. This film comes to the screen for Pongal. Next, Surya's 36th film will be directed by Selvaraghavan. Dream Warrior Pictures is producing. It is already reported that actress Sai Pallavi is acting in this film. Rakul Preet Singh is currently signed as a Heroine of this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X