»   »  சூர்யா ரசிகர்களுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ்... பூஜையோடு #Suriya36 ஆரம்பம்!

சூர்யா ரசிகர்களுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ்... பூஜையோடு #Suriya36 ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை புத்தாண்டு தினமான இன்று நடைபெற்றிருக்கிறது. பட பூஜை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரியில் ஷூட்டிங்

ஜனவரியில் ஷூட்டிங்

'தானா சேர்ந்த கூட்டம்' ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த மாதம் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹீரோயின் சாய் பல்லவி

ஹீரோயின் சாய் பல்லவி

இயக்குநர் செல்வராகவன்தான் சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்கப்போகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

இந்த மாதத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தீபாவளிக்கு அடுத்த படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், சூர்யா ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

சூர்யா 36 பூஜை

சூர்யா 36 பூஜை

இந்நிலையில், 'சூர்யா 36' படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் சிவகுமார் இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளார். செல்வராகவன், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினரும் இந்த பூஜையில் பங்கேற்றுள்ளனர்.

English summary
Surya plays in Selvaraghavan movie after Vignesh Sivan's 'Thanaa Serndha Koottam'. 'Suriya 36' team have started working with a pooja today morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X