»   »  சூர்யா 36 அப்டேட் : சூர்யாவுடன் மோதும் தெலுங்கு வில்லன்!

சூர்யா 36 அப்டேட் : சூர்யாவுடன் மோதும் தெலுங்கு வில்லன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யா 36 அப்டேட்

சென்னை : நடிகர் சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை புத்தாண்டு தினத்தன்று நடந்தது.

இந்தப் படத்தில் நடிக்க 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி, நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பொங்கல் முதல் ஷூட்டிங்

பொங்கல் முதல் ஷூட்டிங்

ஜனவரி 1 முதல் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது. பொங்கல் முதல் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கு நடிகர்கள்

தெலுங்கு நடிகர்கள்

சமீபகாலமாக சூர்யா நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் பெரிய ஓப்பனிங் இருந்து வருவதால், இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் கலைஞர்கள் அதிகமாக நடிக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

வில்லன் ஜெகபதி பாபு

வில்லன் ஜெகபதி பாபு

அந்த வகையில், தமிழைப்போலவே தெலுங்கிலும் முன்னணியில் இருக்கும் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் நிலையில், தற்போது வில்லன் வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பிப்ரவரியில் சண்டைக்காட்சி ஷூட்டிங்

பிப்ரவரியில் சண்டைக்காட்சி ஷூட்டிங்

பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவும், ஜெகபதிபாபுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு தமிழில் 'லிங்கா', 'பைரவா', 'கத்திசண்டை' என சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் ஜெகபதிபாபு.

English summary
Actor Surya's 36th film is directed by selvaraghavan. Sai Pallavi and Rakul Preet Singh have been signed to act in this movie. In this case, Telugu actor Jagapathy Babu has been signed as the villain of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil