twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாடகைத்தாய் தடை சட்டம்.. நயன் -விக்கி தம்பதியை கட்டுபடுத்தாது..உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பேட்டி

    |

    இந்தியாவில் வாடகைத்தாய் தடைச் சட்டம் வந்த நிலையில் நயன் விக்கி தம்பதியை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    நயன் விக்கி தம்பதி வாடகைத்தாய் தடைச் சட்டத்தை மீறினார்கள் என ஒரு கூட்டம் கிளம்பிய நிலையில் வழக்கறிஞரின் விரிவான பதில் தெளிவு படுத்தியுள்ளது.

    வாடகைத்தாய் தடைச் சட்டத்தின் உண்மை நிலை என்ன, ஏன் நயன் விக்கியை கட்டுப்படுத்தாது என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

    வாடகைத்தாய் குழந்தை..சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி?..வாடகைத்தாய் நடைமுறை என்ன?..ஒரு அலசல் வாடகைத்தாய் குழந்தை..சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி?..வாடகைத்தாய் நடைமுறை என்ன?..ஒரு அலசல்

     நயன் - விக்கி திருமணம் வாடகைத்தாய்

    நயன் - விக்கி திருமணம் வாடகைத்தாய்

    இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நிலையில், அக்டோபர் 9ம் தேதியான இன்று இரு ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஆகி உள்ளார் நயன்தாரா என்கிற அறிவிப்பை கணவர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து வாடகைத்தாய் சட்டப்பிரச்சினை எழுப்பப்பட்டது. இந்தப்பிரச்சினையில் நயன் விக்கி தம்பதி கட்டாயம் சிக்குவார்கள் எனவும் இல்லை சிக்கமாட்டார்கள் எனவும் வாத, விவாதங்கள் எழுந்தன.

     சட்டம் என்ன சொல்கிறது?

    சட்டம் என்ன சொல்கிறது?

    நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்படி குழந்தை பிறந்தது என்கிற ஆராய்ச்சியிலும் சிலர் ஈடுபட்டனர். திருமணம் ஆகி நாலு மாதத்தில் குழந்தையா என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ஆனால் சட்டம் சொல்வது ஒன்று மட்டுமே நடைமுறை. விவாதங்கள், அறிவாளித்தனமாக பேசுவது எதுவும் நிற்காது. சரியான ஒன்றை புரிந்துக்கொள்ள சட்ட நிபுணர்கள் மட்டுமே சொல்ல முடியும். அந்த வகையில் நயன் விக்கி பிரச்சினையில் வாடகைத்தாய் சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது என சட்ட நிபுணர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ் பதிலளித்துள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.

     வாடகைத்தாய் தடை வாத விவாதம்

    வாடகைத்தாய் தடை வாத விவாதம்

    வாடகைத்தாய் விவகாரத்தில் ஜனவரி 25 க்கு முன் அவர்கள் பதிவு செய்திருந்தால் பிரச்சினையில்லை, (உதாரணமாக பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றது) ஆனால் ஜனவரிக்கு பிறகு பெற்றால் பிரச்சினை என ஒரு தரப்பினர் அடித்துச் சொன்னார்கள். அதற்குன் இந்த சட்டத்தில் உள்ள காரணங்களை சொன்னார்கள். குழந்தை 10 மாதம் என்று வைத்துக்கொண்டாலும் ஜனவரியில் தான் பதிவு செய்திருப்பார்கள் ஆகவே கண்டிப்பாக சிக்குவார்கள் என வலுவாக வாதம் வைக்கிறார்கள். ஆனால் சட்ட நிபுணர் சொல்லும் பதில் நயன் விக்கி தம்பதிக்கு பிரச்சினையே இல்லை என்பதே.

     உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பதிலை பார்ப்போம், இந்த விவகாரத்தில் நயன் விக்கி ஜோடி சிக்குகிறார்களா?

    உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பதிலை பார்ப்போம், இந்த விவகாரத்தில் நயன் விக்கி ஜோடி சிக்குகிறார்களா?

    இந்த வாடகைத்தாய் ரெகுலேஷன் ஆக்ட் ஜனவரி 25 நோட்டிஃபிகேஷன் வந்த பின்னர், நயன் விக்கி அநேகமாக டிசம்பர் அல்லது ஜனவரியில் பதிவு செய்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் திருமண நேரத்தில் வாடகைத்தாய்க்காக பதிவு செய்திருந்தாலும் அவர்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது. ஏன் இதை சொல்கிறேன் என்பதை பின்னர் நீங்கள் புரிந்துக்கொள்ளலாம். வாடகைத்தாய் நடைமுறை 2022 ஜனவரி நெறிப்படுத்துதல் சட்டம் கொண்டு வந்ததற்கு அடிப்படை காரணமே வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதை வணிகரீதியாக செய்வதை தடுக்கவே சட்டம் கொண்டுவரப்பட்டது.

     இந்த சட்டம் 2022 ஜனவரி 25 வந்துள்ளது, ஒருவேளை இவர்கள் ஜனவரியில் பதிவு செய்திருந்தால் சிக்கலாகுமா?

    இந்த சட்டம் 2022 ஜனவரி 25 வந்துள்ளது, ஒருவேளை இவர்கள் ஜனவரியில் பதிவு செய்திருந்தால் சிக்கலாகுமா?

    இந்த சட்டம் ஜனவரி 25 க்கு அறிவிப்பு வந்தாலும் அது அவர்களை கட்டுப்படுத்தாது. ஜனவரியிலேயே பதிவு செய்து குழந்தை பெற்றாலும் அவர்களுக்கு பாதிப்பில்லை. ஏனென்றால் சட்டம் அறிவிப்பாக வந்தாலும் அந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்தது ஜூன் 26, 2022 ஆகும். மத்திய அரசு சட்ட விதிகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது ஜூன் 26- 2022 க்கு பிறகு. அதே காலகட்டத்தில் மாநில அரசுகள் போர்டு, அத்தாரிட்டி போன்றவைகளை நியமனம் செய்து நடைமுறைக்கு வந்தால் தான் சட்டம் செல்லுபடியாகும்.

    தமிழக அரசு அத்தாரிட்டி (அதிகாரி) நியமனம் செய்த பின்னர்தான் சட்டம் நடைமுறைக்கு வரும். அந்த அத்தாரிட்டி தான் யார் குழந்தைகள் பெற தகுதியானவர்கள், வாடகைத்தாய் குறித்து மனு பெற்று முடிவு செய்வார்(கள்). ஆகவே இவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதில் இவர்கள் புதிதாக போட்ட சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். ஆகவே இந்த சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது. நயன் விக்கி ஜோடிக்கு சிக்கல் இல்லை.
     ஜனவரியிலேயே வாடகைத்தாய் குறித்து மத்திய அரசு நோட்டிஃபிகேஷன் கொடுத்து விட்டார்களே? அப்படியானால் குற்றம் தானே?

    ஜனவரியிலேயே வாடகைத்தாய் குறித்து மத்திய அரசு நோட்டிஃபிகேஷன் கொடுத்து விட்டார்களே? அப்படியானால் குற்றம் தானே?

    சட்டம் வரப்போகிறது என்கிற நோட்டிஃபிகேஷன் மட்டும் சட்டம் அல்ல. அந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வருகிறதோ அப்போதுதான் அதாவது அதற்கு பின் செய்யும் தவறான நடைமுறைதான் சிக்கலில் ஆழ்த்தும். சட்டம் வந்தது ஜனவரி 25 என்றாலும் அதன் விதிகள் வந்தது ஜூன் 2022 க்கு பிறகுதான். அதிலும் முழுமையாக போர்டு அமைப்பது அதன் கீழ் அதாரிட்டி உள்ளிட்ட பல விஷயங்கள் முழுமை பெறவில்லை. ஆகவே இந்த சட்டத்தின் எந்த அம்சமும் நயன் விக்கி தம்பதியை கட்டுப்படுத்தாது.

     சட்டம் நடைமுறைக்கு வருவது என்பதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஜனவரி 23 க்கு பிறகு வந்துவிட்டதாக நினைக்கிறோம்

    சட்டம் நடைமுறைக்கு வருவது என்பதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஜனவரி 23 க்கு பிறகு வந்துவிட்டதாக நினைக்கிறோம்

    சட்டம் அமலுக்கு வருவது என்பது, சட்டத்துக்கான நடைமுறைகளை வகுத்து அளிப்பது. மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்தியது ஜன-26, 2022, அதன் பின் மாநில கமிட்டியையும், அதிகாரிகளையும் நியமித்தது ஜூன் 22, 2022 க்குப்பின் தான். அதற்கு பின் மாநில அளவிலான போர்டு, மத்திய அரசு அளவில் ஒரு போர்டு. அதன் பின்னர் அங்கிக்கரிக்கப்பட்ட அத்தாரிட்டி கமிட்டி நியமிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளன. அதன் பின் இங்கு செயற்கை கருத்தரித்தல் மற்றும் வாடகைத்தாய் வரைமுறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அனைத்தும் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தப்பின்னரே சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்ததாக அர்த்தம்.

     அத்தாரிட்டியின் பணி என்ன?

    அத்தாரிட்டியின் பணி என்ன?

    மாநில அளவில் அத்தாரிட்டி குழுவில் 5 பேர் கொண்ட டீம் இருக்கும். ஒருவர் ஹெல்த் டிபார்ட் மெண்ட் ஜாயிண்ட் செகரட்டரி அந்தஸ்த்துக்கு மேல் உள்ள அதிகாரி இருப்பார், குடும்பநல சுகாதாரத்துறை இணை இயக்குநர், பெண்கள் நல அமைப்பிலிருந்து தகுதியா ஒரு பெண் ஒருவர், சட்ட அமைச்சகத்திலிருந்து ஒருவர் மற்றும் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருப்பர். இவர்களிடம் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோர் சான்றிதழ் வாங்கணும், வாடகைத்தாய் குறித்தும் இந்த குழுவே முடிவு செய்யும். சட்டமீறல் நடந்தால் இந்த குழுதான் சட்ட நடவடிக்கை எடுக்கும். போலீஸ், தனி மனிதர் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது. அனைத்தும் நீதிமன்றம் மூலமே நடக்கும்.

     போர்டு என்றால் என்ன?

    போர்டு என்றால் என்ன?

    போர்டு அத்தாரிட்டிக்கு மேல் உள்ள அமைப்பு இதில் மருத்துவத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார், ஹெல்த் செகரெட்ரி துணை தலைவர், குழந்தைகள் நலன், சமூக நலன், சட்டத்துறை செயலர்கள், ஆணையர்கள் இருப்பார்கள், சுகாதாரத்துறை இயக்குநர் உறுப்பினர் செயலராக இருப்பார் இருப்பார். 3 பெண் எம்.எல்.ஏக்கள் இருப்பர் இந்தக்குழு சட்ட நடைமுறைகளை வகுத்தல் ஆய்வு செய்தல், புதிய விதிகளை வகுத்தல், வாடகைத்தாய் குழந்தைகளை பெற்றுக்கொள்ள சிகிச்சை அளிக்கும் கிளினிக்குகளை வகைப்படுத்துதல், அரசுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட என பல வேலைகள் இருக்கும்.

     இதில் நயன் - விக்கிக்கு என்ன வகையான சட்டப்பாதுகாப்பு

    இதில் நயன் - விக்கிக்கு என்ன வகையான சட்டப்பாதுகாப்பு

    சட்டம் நோட்டிஃபிகேஷன் ஜனவரியில் வந்தாலும் விதிகள் அமலுக்கு வந்தது ஜூன் 2022-ல் தான். சட்டப்பிரிவு 53 என்ன சொல்கிறது என்றால் ஒரு சட்டம் அறிவிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வருகின்ற இடைப்பட்ட தயாரிப்பு நடக்கும் (gestation period) காலக்கட்டத்தில் செய்யப்படும் எதுவும் சட்ட மீறல் இல்லை, (இதுபோன்று குழந்தை பெறுபவர்களை) சட்டம் கட்டுப்படுத்தக்கூடாது, முழு நடைமுறை வந்த பின்னர் நடக்கிற சட்ட மீறலே குற்றமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், அதன்படி பார்த்தால் அந்த இடைப்பட்ட காலத்தில் (gestation period) இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதால் எந்த விதியும் நயன் தாரா- விக்னேஷ் ஜோடியை கட்டுப்படுத்தாது. அவர்கள் ஜாலியாக குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களும் இனி இந்த விவாதத்தை தவிர்க்கலாம். இவ்வாறு வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்தார்.

    English summary
    The lawyer said that while the Surrogacy Prohibition Act has come in India, this Act will not restrict the Nayan Vicky couple. The lawyer's detailed reply clarified that Nayan Vicky couple had not violated the Surrogacy Prohibition Act. What is the reality of the Surrogacy Act, advocate has given an explanation as to why the act not controlled Nayan and Vikky
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X