இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுறாங்க..பிக்பாஸிடம் புகார் சொல்லும் சுருதி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 17 வது நாளை எட்டி உள்ளது. இதுவரை இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது வாரத்தில் வெளியே போவது யார் என்பதற்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video

இந்த வார தலைவராக சிபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாவது ஆளாக வெளியேற போவது யார் என்பதற்கான எலிமினேஷன் ப்ராசஸ் நடந்து வருகிறது. இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பிப்பதற்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில் ராஜுவுடன் பிரியங்கா, அபிஷேக் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது பேச வரும் இமான் அண்ணாச்சியிடமும் அபிஷேக் கோபமாக பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேமிரா முன் வந்து பேசும் சுருதி, Manipulate பண்றாங்க. இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுறாங்க. பேப்பர் வச்சு மெசேஜ் கேம் விளையாடுறதுக்கு பிக்பாஸில் எப்படி அனுமதிக்கீறங்க. இத கேமிராவில் நீங்க படம்பிடிக்கிறீங்களா என தெரியவில்லை. இதை நீங்க சரி செய்யுங்க என புகார் கூறுகிறார்.
அடுத்த கட்டில், ஒருவரை இன்ஃப்ளுயன்ஸ் பண்றது தப்பு என்கிறார் பிரியங்கா. அதற்கு அபிஷேக், நான் இன்ஃப்ளுயன்ஸ் பண்றேன் என்றால் எனக்கு அந்த பவர் இருக்கு. அதனால் அதை செய்கிறேன் என்கிறார். அதை நீங்க கேட்கிறீர்கள் என்பது போல் பேசுகிறார்.
அப்போது வருண், அப்படியானால் நானும் அதை தடுப்பேன். அதை ஏன் என நீ கேட்க கூடாது என்கிறார். பிரியங்கா, இதுவும் நடக்கிறது தெரிஞ்சுக்கோங்கடா என்று தான் சொல்றேன் என்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு பலர் அபிஷேக்கை சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றி உள்ளனர். தயவு செய்து இவனை ப்ரோமோவில் காட்டாதீங்க. எரிச்சலா வருது என தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் பிக்பாஸ் வரலாற்றிலேயே இவன போல ஒரு போட்டியாளரை பார்த்ததே இல்லை என கூறி உள்ளனர். எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பதற்காக பிளான் பண்ணி தான் அபிஷேக் பண்றாரு. அண்ணாச்சி, ராஜு பலமுறை சொன்ன பிறகும் பிரியங்கா ஏன் அபிஷேக் கூடவே சேர்ந்து இருக்காங்க. அபிஷேக்கை எலிமினேட் பண்ணுங்க என்கின்றனர் பலர்.


Click it and Unblock the Notifications











