கலரை வைத்து ஒதுக்குகிறார்கள்... மனகுமுறலை கொட்டும் சுருதி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது. அதிகம் தெரியாத புதுமுகங்கள் பலவும் இந்த முறை போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளன. 18 போட்டியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே தெரிந்த முகங்களாக உள்ளன.
போட்டி துவங்கி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகிறது. இந்த இரண்டு நாட்களில் போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. இதனால் ரசிகர்களிடம் போட்டியாளர்கள் பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஜாலியான முதல் நாள்
முதல் நாள் கலகலப்பு, ஜாலி, காமெடி என சென்ற நிலையில், இரண்டாம் நாளான நேற்று, போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள், சந்தித்த தடைகள், கஷ்டங்கள் பற்றி ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் மனதிறந்து பேசலாம். அதை கேட்டு விட்டு ஹவுஸ்மேட்ஸ், அந்த கதை தங்களின் மனம் கவர்ந்ததா, ரசிக்கும் படி இருந்ததா, தனது மனதை கவரவில்லையா என்ற கருத்தை எமோஜிக்களால் வெளிப்படுத்த வேண்டும் என்றார் பிக்பாஸ்.

கதை சொன்ன போட்டியாளர்கள்
முதல் ஆளாக தனது கதையை சொன்ன இசைவாணிக்கு பலரும் ஹார்ட், லைக் கொடுத்தனர். ஆனால் அவரை தனி அழைத்து கருத்து சொன்ன ராஜு ஜெயமோகன், கதையை ஏன் அழுதுகிட்டே சொன்ன. தைரியமாக சொல்லிருக்கனும் என கருத்து சொல்கிறார். அடுத்தபடியாக தனது கதையை சொன்ன சின்ன பொண்ணுவிற்கு அனைவரும் லைக் கொடுக்க, ராஜு மட்டும் அந்த கதை தனது மனதை கவரவில்லை என கூறி டிஸ்லைக் கொடுக்கிறார்.

மூன்றாம் நாளே சண்டையா
இந்நிலையில் மூன்றாம் நாளுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இதில் முதல் ப்ரோமோவில். இமான் அண்ணாச்சி தனது கதையை சொல்லும் போது சிபி கோபப்படுவதை போலவும், இதனால் வீட்டிற்குள் சண்டை ஆரம்பமாவதை போலவும் காட்டுகிறார்கள். நமீதா மாரிமுத்து, வீட்டில் சண்டை ஆரம்பமாகிறது என்கிறார்.

கண் கலங்கும் சுருதி
ஆனால் அதற்கு நேர் மாறாக இரண்டாவது ப்ரோமோவில் சுருதி, தனது வாழ்க்கையில் நடந்த சோகங்களை ஐக்கி மற்றும் இசைவாணியிடம் கண்கலங்கி சொல்லிக் கொண்டிருப்பதாக உள்ளது. இரண்டவது ப்ரோமோவில், நான் அழவே கூடாதுன்னு நினைச்சேன் என்கிறார் சுருதி. அதற்கு இசைவாணி, அழனும்னு தோணுச்சுன்னா அழு என்கிறார். அதற்கு இந்த சுருதி, இந்த அழுகை தான் என்னை strong ஆக்கிருக்கு. நான் அழுவேன் என்கிறார்.

நாங்க இங்க வந்திருக்கவே மாட்டேன்
இசைவாணியும், நம்மள ஒதுக்குறாங்கன்னா அவங்க நம்மள செதுக்குறாங்கன்னு அர்த்தம் என்றார். அதற்கு சுருதி, நீங்க நிறைய இடத்தில் கவனிச்சிருப்பீங்க கலரை வைத்தே நம்மை dominate பண்ணீருப்பாங்க என்கிறார். எப்போ ஒதுங்குறாங்களோ அப்ப தான் நாம தனியா தெரிவோம் என்கிறார் இசைவாணி. அந்த கலர்னால தான் இங்க நிற்கிறேன். எனக்கு இந்த கஷ்டம் எல்லாம் இல்லை என்றால் நான் இந்த வீட்டிற்கு வந்திருக்க மாட்டேன் என்கிறார் சுருதி. இசைவாணி, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிறார். ஐக்கி, உண்மை தான் என்கிறார். இப்படி ப்ரோமோ முடிகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், சுருதி சம்பவம் லோடிங்கா என கேட்டுள்ளனர். இன்னும் சிலர், சொந்த கதைய ஃபீல் பண்ணி சொன்னா, இவங்க என்னமோ டைரக்டர் மாதிரி இதை ஏன் இப்படி சொன்ன, இதை சொல்லாத, அதை சொல்லுன்னு சொல்லிட்டு இருக்காங்க. அபிஷேக்கிற்கு கமல் கிட்ட அபிஷேகம் காத்திருக்கு போல என கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் வந்த மூன்றாவது நாளே சண்டையா...பிக்பாஸ் நல்லா கொளுத்தி போடுறீங்க என கலாய்த்துள்ளனர்.

இது எடிட்டர் சம்பவம்ப்பா
முதல் ப்ரோமோவை பார்த்துட்டு ஒரு செட் ஆடியன்ஸ், இன்னிக்கு சம்பவம் இருக்கு. i am waiting ன்னு கமெண்ட் போடுறாங்க. ஆனால் மற்றொரு செட் ஆடியன்ஸ் இது போட்டியாளர்கள் பண்ற சம்பவம் இல்லைங்க, எடிட்டர் பண்ற சம்பவங்க என சிலர் கலாய்த்து வருகின்றனர். இது சிலர் அபிஷேக் வீடியோ வைரல் ஆகுதே ஆண்டவர் பாத்துப்பாரா என நக்கலாக கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











