அதுமட்டும் தான் ரொம்ப வருத்தமா இருக்கு.. எவிக்ஷனுக்கு பிறகு சுருதி போட்ட முதல் வீடியோ!
சென்னை: கருப்பு லட்சுமியாகவும் யானை மீது அமர்ந்து தைரிய லட்சுமியாக போட்டோஷூட் நடத்திய சுருதி பெரியசாமி பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் அவர பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கருப்பு லட்சுமி
மாடல் அழகியான சுருதி பெரியசாமி பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார். கருப்பு லட்சுமியாக அவர் நடத்திய 'டார்க் காட்' தீம் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சுருதிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெரும் முயற்சிகள் அரங்கேறின.

அவ்வளவு அழகா
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் அழகு பதுமையாக ஜொலித்து வந்தவர் சுருதி. பாவனி, அக்ஷரா உள்ளிட்டோருக்கு உடை அலங்காரத்தில் கடும் போட்டியாக இருந்து வந்தார் சுருதி. மேலும், அவர்களை போல தினமும் அழுது புலம்பாமல் போல்டாக பேசி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

யானை மீது ஒய்யாரமாக
பிக் பாஸ் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஹவுஸ்மேட்களின் போட்டோக்களாக பிளாஸ்மா டிவியில் காண்பிக்கப்பட்ட போது சுருதி யானை மீது கொஞ்சமும் பயமே இல்லாமல் ஒய்யாரமாக அமர்ந்தபடி போஸ் கொடுத்த போட்டோக்களையும் காட்டி இருந்தனர். அதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸும் ரசிகர்களும் அவரை வெகுவாக பாரட்டினர்.

கமலிடம் பாராட்டு
ராஜுவுக்கு அடுத்து இந்த சீசனில் கமல் சார் கிட்ட அதிகம் பாராட்டுக்களை வாங்கியவர் சுருதி தான். தாமரை அந்த கோலத்தில் இருக்கும் போது கூட அவரிடம் இருந்து காயினை திருடியது ஒன்றும் ஐபிசி குற்றம் இல்லை என கமல் கூறியிருந்தார். ஆனால், அடுத்த வாரமே அவரது வாயாலே சுருதியை வெளியேற்ற வேண்டிய நிலை வந்து விட்டது.

பிக் பாஸிலும் நெபோடிசமா
ஜெமினி பேரன் அபிநயை காப்பாற்றத்தான் சுருதியை போன வாரம் வெளியேற்றினார் கமல்ஹாசன் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் குற்றச்சாட்டை அடுக்கி வருகின்றனர். மேலும், பிக் பாஸ் சீசன் 5ல் நெபோடிசம் தலை விரித்து ஆடுகிறது என்கிற குற்றச்சாட்டுகளும் கிளம்பி உள்ளன.

சுருதியின் முதல் பதிவு
பிக் பாஸ் வீட்டில் இருந்து 35 நாட்களில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட சுருதி தற்போது ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது. தனக்கு ஆதரவு அளித்த அத்தனை பேருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

அதுமட்டும் தான் வருத்தம்
பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து அந்த டிராபியை கையில் வாங்கும் போது எந்த அளவுக்கு மகிழ்ச்சி இருக்குமோ அதே அளவுக்கு நீங்கள் இத்தனை சீக்கிரம் என் மீது வைத்த நம்பிக்கையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், உங்களை எல்லாம் ஏமாற்றி விட்டு குறுகிய காலத்தில் வெளியேறியது மட்டும் தான் வருத்தம். என்னுடைய அடுத்த முயற்சிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











