என்னை விட இசை, மதுவைத்தான் உனக்கு பிடிக்குமா? வந்ததும் வராததுமாக பாவனியிடம் சண்டை பிடித்த சுருதி!
சென்னை: பாவனி ஒருநாள் ஒருமாதிரி பேசுவார், மறுநாள் அதையே மாற்றி பேசுவார் என ராஜு பகிரங்க குற்றச்சாட்டு வைத்ததை சுருதியும் ஒருமுறை கன்ஃபார்ம் பண்ணுவது போல பேசியது தான் குறைந்த அளவு கன்டென்ட்டாக மாறியுள்ளது.
சீக்கிரம் இந்த சீசனை கோப்பையை கொடுத்து முடித்து விடுங்கடா என்கிற மனநிலையில் தான் ரசிகர்கள் பலரும் உள்ளனர்.
உள்ளே வந்த சுருதி பாவனி என்னை விட உனக்கு இசை மற்றும் மதுமிதாவை தான் பிடிக்கும்னு சொன்னீயா? என கேள்வி கேட்டு அவரை லாக் செய்து விட்டார்.

சுருதியை கலாய்த்த ராஜு
க்ரீன் கலர்னு சொல்லு சுருதி என சொல்ல வைத்த ராஜு அமீர் மற்றும் சுருதி போட்டிருந்த டிரெஸ் கலரை வைத்து சின்னதா ஒரு கலாய் டிராமாவை அரங்கேற்றினார். என்னையும் கோத்து விட்டுடாதீங்க தலைவரே என்பது போல ராஜுவிடம் பெரிய கும்பிடாக போட்டு எஸ்கேப் ஆனார் சுருதி.

பாவனியிடம் பாய்ச்சல்
என்னை விட உனக்கு இசைவாணியும் மதுமிதாவும் தான் பிடிக்கும்னு சொன்னியாமே பாவனி என வந்ததும் வராததுமாக தனது தோழியிடம் பாய்ந்து விட்டார் சுருதி. என்ன இருந்தாலும் பாவனி பண்ண காரியத்தால் தான் எலிமினேட் ஆனோம் என்கிற வருத்தம் சுருதிக்கு இருக்கத்தானே செய்யும்.

மாத்தி பேசும் பாவனி
முதல் நாள் தான் உனக்காக நான் போன் பண்ணி பேசினேன்.. பாவனிக்கு போன் பண்ணி பேசின சுருதியை அவ்வளவாக பிடிக்காது என்றும் இசை மற்றும் மதுவை தான் பாவனிக்கு பிடிக்கும் என சொன்னியா? என சுருதி கேட்க அப்படியெல்லாம் சொல்லல என மழுப்பி விட்டார் பாவனி. இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் பாவனி மாற்றி பேச ஆரம்பித்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.

கட்டிப்பிடி வைத்தியம்
சுருதியை சாந்தப்படுத்த அதெல்லாம் இல்லைப்பா.. உன்னைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கட்டிப்பிடி வைத்தியம் செய்து சமாதானப்படுத்தி விட்டார் பாவனி. ஒரு வேளை போன் காலில் சுருதி பாவனிக்கு அட்வைஸ் சொல்ற மாதிரி பேசுனதால பாவனி அப்படி சொல்லி இருப்பாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
Recommended Video

பாவமா தெரியலையா
பல போராட்டங்கள், பல அவமானங்களை கடந்து தடைகளை உடைத்து எறிந்து பாவனி ஃபினாலேவுக்கு வந்திருக்கிறார். அவரை பார்த்தால் பாவமா தெரியலையா சுருதி ஏன் இப்படி எல்லாம் கேட்டு பாவனியை அப்செட் பண்றீங்க என பாவனி ஆர்மியினர் புலம்பி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் பாவனிக்கு எப்பவுமே சுருதி சப்போர்ட் செய்வார் என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications











