Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சர்வைவர் தமிழ் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம்.. வருங்கால கணவருடன் செம க்யூட் போஸ்!
சென்னை: சர்வைவர் தமிழ் போட்டியாளர் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தனது வருங்கால கணவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி ஜீ தமிழில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.
இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக பிகினி போட்டோக்களை போட்டுத் தாக்கி வந்த ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு அதற்குள் திருமணம் ஆகப் போகிறதா என அவரது ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகி உள்ளனர்.
இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது எனும் சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் அறிவித்துள்ளார்.
சர்வைவர் தமிழ் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது.. இவர் தான் காதலராம்!

அர்ஜுன் ஹோஸ்ட் பண்ண ஷோ
ஜீ தமிழில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பானது. ஏகப்பட்ட நடிகர்களை வைத்து நடத்தப்பட்ட அந்த ஷோ இந்த ஆண்டும் சீசன் 2 வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. அதில், போட்டியாளராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா கிருஷ்ணன் ஜீ தமிழில் மேலும், சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்து வருகிறார்.

துணிவு அதிகம்
ஃபிட்னஸ் டிரெயினரான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பல சினிமா பிரபலங்களுக்கும் பயிற்சி அளித்து வந்தார். மாடலிங்கில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக அடிக்கடி போட்டோஷூட்களையும் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த அவருக்கு சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

காதல் திருமணம்
சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது காதலர் இவர் தான் என ஹேண்ட்ஸம் ஆன பாய் ஃபிரெண்ட் உடன் எடுத்துக் கொண்ட சில போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருவரும் ரொம்பவே அழகா இருக்கீங்க, சூப்பர் ஜோடி பொருத்தம் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நிச்சயம் ஆகிடுச்சு
ரெஸ்டரன்ட் ஒன்றில் சமீபத்தில் தனது காதலை ஐஸ்வர்யா கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அவருடன் நிச்சயம் ஆகிவிட்டது என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குவிகிறது வாழ்த்து
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி மூலம் ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த ஐஸ்வர்யா கிருஷ்ணன் சோஷியல் மீடியாவில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில், தனது வருங்கால கணவரை அவர் அறிமுகப்படுத்திய நிலையில், அதற்குள் திருமணமா என ரசிகர்கள் ஆதங்கப்பட்டாலும், நல்லா இருங்க என மனதார வாழ்த்தி வருகின்றனர்.