‘சர்வைவர் கம்மிங் சூன்’ போஸ்டரை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி… காத்திருக்கும் ரசிகர்கள் !
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சர்வைவர்" என்ற பிரம்மாண்டமாக எண்டெர்டைன்மெண்ட் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சர்வைவர் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்க வேண்டும்.

சர்வைவர்
ஜீ தமிழ் தொலைக்காட்சி பல வித்தியாசமான தொடர்களையும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரம்மாண்டமான எண்டெர்டைன்மெண்ட் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 'சர்வைவர்' என்ற பெயரில் ஆளில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

புது கேம் ஷோ
அந்த தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். உணவு, தண்ணீர், தங்குமிடம் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் போட்டியாளர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

டாஸ்குகள்
அதில் போட்டியாளர்களின் நம்பத்தன்மையும், போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகள் கொடுக்கப்படும். இதில் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் போட்டியாளர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

சர்வைவர் கம்மிங் சூன்
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இணைய பக்கத்தில் சர்வைவர் கம்மிங் சூன் என்ற போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும், யார் யார் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவலும் அதில் இடம் பெறவில்லை. உலக அளவிவ் பிரபலமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











