»   »  '24' வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சூர்யா

'24' வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: '24' வெற்றியை அமெரிக்காவில் தன்னுடைய ரசிகர்களுடன் நடிகர் சூர்யா கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்.

சூர்யா-சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான '24' திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


குறிப்பாக இப்படத்தில் சூர்யாவின் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


24

24

விஞ்ஞானி, வில்லன், நாயகன் என சூர்யா 3 தோற்றங்களில் நடித்த '24' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் நீளம் மட்டுமே குறை மற்றபடி படம் நன்றாக உள்ளது என்று இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படத்தின் நீளத்தில் 10 நிமிடங்களைக் குறைத்து வெளியிட படக்குழு முன்வந்தது.
2000 அரங்குகள்

2000 அரங்குகள்

சூர்யாவின் திரை வரலாற்றில் முதன்முறையாக உலகம் முழுவதும் 2௦௦௦ க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இந்தியாவில் 6ம் தேதி வெளியான இப்படம் ஒருநாள் முன்னதாக மற்ற நாடுகளில் வெளியாகிவிட்டது. இப்படத்தின் அமெரிக்க பிரீமியர் ஷோவில் சூர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு படம் பார்த்தார்.


3 நாட்களில்

3 நாட்களில்

24 படத்தின் முதல் 3 நாட்கள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் சுமார் 73.8 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவில் பாகுபலிக்கு அடுத்தபடியாக அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது.


தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் 44.5 கோடிகளை மொத்தமாக வசூல் செய்துள்ளது. யுஎஸ் பாக்ஸ் ஆபீஸில் 6.8 கோடிகளையும் ஆஸ்திரேலியாவில் 91 லட்சங்களையும் வசூலித்துள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் 73 கோடிகளை வசூல் செய்துள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் அவரது படமொன்று இவ்வளவு வசூலைக் குவிப்பது இதுவே முதல்முறை.
சக்சஸ்

24 படத்தின் வெற்றியை தன்னுடைய அமெரிக்க ரசிகர்களுடன் சூர்யா கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார். இப்படத்தின் வெற்றியால் ஹீரோ, வில்லன், தயாரிப்பாளர் என மூன்றிலுமே சூர்யா வெற்றிக்கொடி நாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Surya Celebrate 24 Success in USA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil