»   »  சிங்கம் 3 டிசம்பரில் தொடங்கும் - சூர்யா

சிங்கம் 3 டிசம்பரில் தொடங்கும் - சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2 ம் தேதியில் தொடங்கும் என்று நடிகர் சூர்யா உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

சிங்கம், சிங்கம் 2 படத்தின் மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்திற்கான வேலைகளை இயக்குநர் ஹரி தொடங்கியிருக்கிறார். கடந்த மாதமே தொடங்கும் என்று எதிர்பார்த்த சிங்கம் 3 யின் படப்பிடிப்பு சூர்யாவின் 24 படத்தால் தொடர்ந்து தள்ளிப் போனது.


Surya Confirms Singham 3 Shooting

சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 2 ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று படத்தின் நாயகன் சூர்யா உறுதியாக தெரிவித்திருக்கிறார்.


சமீபத்தில் மலபார் கோல்டின் புதிய ஷோரூமை கோயம்புத்தூரில் திறந்து வைக்க நடிகர் சூர்யா வந்திருந்தார். விழாவில் சூர்யா பேசும்போது சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 2 ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று கூறினார்.


ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து 5 வது முறையாக சூர்யாவுடன் இணைந்து ஹரி பணியாற்றவிருக்கிறார். இந்தப் படத்திற்கான பணிகளை ஹரி ஏற்கனவே தொடங்கி விட்டார்.


முதல் 2 பாகங்களிலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா செட்டியே இந்தப் படத்திலும் ஜோடியாக தொடர்கிறார். அனுஷ்காவுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் இன்னொரு நாயகியாக சிங்கம் 3 யில் நடிக்கிறார்.


விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Surya Recently to Inaugurated the Malabar Gold Showroom in Coimbatore After he is Confirms Singham 3 will Starts from December 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil