Don't Miss!
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது...சூரி புகழாரம்!
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர் நடிகர் சூரி
வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்
இந்நிலையில் சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசிய சூரி, சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என புகழ்ந்து பேசியுள்ளார்.
என்ன இவ்ளோ பாஸ்ட்டா இருக்காங்க... பாலிவுட்டில் படமியக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

காமெடியனாக புகழ் பெற்ற
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சூரி அதற்கு முன்பாகவே பல படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றிருப்பார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வளர்ந்து கொண்டு உள்ளார்.

தனித்துவமான காமெடி
வெள்ளந்தியான பேச்சு யாரையும் காயப்படுத்தாத காமெடி என தனது தனித்துவமான காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவரின் காமெடிகள் பலவும் இன்றைய தலைமுறைகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

ஹீரோவாக
இதுவரை காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சூரி இப்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க ஜிவி பிரகாஷின் தங்கை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

3 கிராமங்களையும் தத்தெடுத்து
காமெடியன் ஹீரோ என சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் சூரி சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் காமெடியனாக நடித்து உள்ளார். வழக்கம்போல ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சூரி பட விழாவில் சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் அதில் பேசிய சூரி சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல இளைஞர்கள் நல்ல தரமான கல்வியைப் பெற்று பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் ஜெய் பீம் படத்தில் இருளர்களின் வாழ்க்கையை கூறியதோடு 3 கிராமங்களையும் தத்தெடுத்து உள்ளார்.
Recommended Video

ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது
இது சாதாரண விஷயம் அல்ல . திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சூர்யாவின் குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார் சூரி. சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் சேவை நோக்கத்துடன் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.