Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூரரைப் போற்று ரீமேக்… மும்பை சென்ற நடிகர் சூர்யா
மும்பை : சூர்யா நடித்து நேரடியாக அமேசான் பிரைம் இல் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் கொண்டாடினர். பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து படம் ஹிட் என பேசப்பட்டது
சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, ராவல் போன்ற நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்
தற்போது இந்தப் படத்தை அதே இயக்குனர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் பங்கேற்பதற்காக நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ளார்.
கேஜிஎஃப் 3 கதை லீக் ஆகிடுச்சு...அடுத்த 1000 கோடி வசூல் கன்ஃபார்ம்

சூரரை போற்று
சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசானில் ரிலீசானது சூரரை போற்று திரைப்படம். நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ததால் கோபமடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் சூர்யாவின் படங்களை திரை அரங்குகளில் திரையிட மாட்டோம் என அறிவித்தனர். OTT இல் ரிலீசான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் பல பிரபலங்களின் மனதிலும் இடம் பிடித்தது. கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து மக்கள் கண் கலங்கினர்.

சூரரைப் போற்று ரீமேக்கில் அக்ஷய் குமார்
தமிழில் சூப்பர் ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது பல பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று படத்தின் பூஜை தேங்காய் உடைப்புடன் ஆரம்பமானது. இதற்காக நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ளார். காரணம் சுதா கொங்கரா சூர்யாவின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அக்ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்தை 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் Abundanter என்டர்டைன்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கிறார். இன்னும் சில தினங்களில் தொடர் படப்பிடிப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. சூரரைப் போற்று தமிழ் படத்தை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஏற்கனவே பார்த்திருக்கும் நிலையில் ஹிந்தி படத்தை எப்படி ஏற்பார்கள் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு ஓடுகிறது.

அக்ஷய் குமாரின் எக்ஸ்பிரிமெண்ட்
ஹிந்தியில் பல முன்னணி ஹீரோக்கள் இருந்தபோதும் எக்ஸ்பெரிமெண்ட் படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். அந்த வரிசையில் தமிழில் சூப்பர் ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறார். இதற்காக பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் முடிவில் இதில் நடிப்பதாக ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ் படத்தில் உயிர் போகாமல் அதை அப்படியே எடுக்க அதே இயக்குனரான சுதா கொங்கராவை ஹிந்தியில் அறிமுகம் செய்கின்றனர். சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.
Recommended Video

தேங்காய் உடைப்புடன் துவங்கிய
இன்று சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் தேங்காயுடன் இனிதே ஆரம்பமானது. படத்தின் கதாநாயகி ராதிகா மதன் தேங்காய் உடைக்கும் புகைப்படத்தை அக்ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு " தேங்காய் உடைக்கப்பட்டு இதய பூர்வ பிரார்த்தனையுடன் பெயரிடப்படாத எங்கள் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இது கனவுகளை உயரங்களை அடையும் இந்த படத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஏதாவது தலைப்பு எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். அதுமட்டுமில்லாமல் உங்கள் வாழ்த்துக்களும்" என குறிப்பிட்டுள்ளார்.