twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலை அழுத்தமாக சொன்ன படம்... 13 ஆண்டுகளை கடந்த வாரணம் ஆயிரம்!

    |

    சென்னை : நடிகர் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2008 நவம்பர் 14ம் தேதி ரிலீசான படம் வாரணம் ஆயிரம்.

    Recommended Video

    பெயர் அரசியலாக மாற்ற வேண்டாம் | Anbumani-கு பதிலடி கொடுத்த Suriya | JaiBhim

    காதலை வித்தியாசமாகவும் அழுத்தமாகவும் சொன்ன வகையில் இந்தப் படம் சிறப்பான கவனத்தை பெற்றது.

    வெளியான சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்... பட்டையை கிளப்பிய சாரக் காற்றே பாடல்! வெளியான சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்... பட்டையை கிளப்பிய சாரக் காற்றே பாடல்!

    சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் அவரை வித்தியாசமாக படம்பிடித்திருந்தார் கௌதம் மேனன்.

    வாரணம் ஆயிரம் படம்

    வாரணம் ஆயிரம் படம்

    நடிகர் சூர்யாவிற்கு பெயர் தேடித் தந்த படங்களில் மிகவும் முக்கியமான படம் வாரணம் ஆயிரம். இந்தப் படத்தில் சூர்யா தந்தை -மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் காதலை வித்தியாசமாகவும் அழுத்தமாகவும் சொன்ன விதத்தில் இந்தப் படம் கவனம் பெற்றது.

    இரட்டை வேடங்கள்

    இரட்டை வேடங்கள்

    தந்தை கிருஷ்ணனாகவும் மகன் சூர்யாவாகவும் சூர்யா நடித்திருந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் அழகான காதலை கொடுத்திருந்தார் கௌதம் மேனன். வழக்கம்போல இந்தப் படத்தில் நடித்திருந்த அவரது கதாநாயகிகள் சிம்ரன், சமீரா ரெட்டி மற்றும் திவ்யா ஸ்பந்தனா என மூவரும் மிகவும் அழகாக இருந்தனர்.

    சிறப்பான பாடல்கள்

    சிறப்பான பாடல்கள்

    தனது தந்தையுடனான பல்வேறு தருணங்களை நினைவுகூறும் மகன் என்ற கதைக்களத்தில் இந்தப் படம் வெளியானது. பாடல்கள் அனைத்தும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் அழகாக இருந்தன. இன்றுவரை ரசிகர்களின் பேவரிட் பாடல்களில் ஒன்றாக அமைந்துள்ளன.

    அடுத்தடுத்த காதல்கள்

    அடுத்தடுத்த காதல்கள்

    குறிப்பாக தந்தை சூர்யாவிற்கான முன்தினம் பார்த்தேனே பாடல் கவிதையாக இருந்தது. தொடர்ந்து மகன் சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு காதல்கள் மற்றும் அவற்றிற்கான பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. காதல் தோல்வியால் மனம்வெறுத்து சூர்யா பாடும் அஞ்சலை பாடலும் ரசிகர்களின் பேவரிட்டாக அமைந்தது.

    சிறப்பான திரைக்கதை

    சிறப்பான திரைக்கதை

    ஆரம்பம் முதலே படம் மெதுவாக நகர்வதாக தோன்றினாலும் ஒரு இடத்திலும் ரசிகனை வெறுப்பேற்றாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. மகன் சூர்யாவின் நினைவலைகளில் தந்தை குறித்த சிறப்பான மதிப்பு வெளிப்பட்டது படத்தின் பலம்.

    அழகான சமீரா, திவ்யா

    அழகான சமீரா, திவ்யா

    அழகாக வரும் சமீரா ரெட்டி சிறிது நேரத்திலேயே குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழப்பது மிகப்பெரிய சோகம். அவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் ரசிகர்கள் தங்களது தவிப்பை வெளிப்படுத்தினர். ஆனாலும் அவரது இடத்தை திவ்யா ஸ்பந்தனா நிரப்புவது ஆறுதல். அவர்களுக்கிடையிலான பனித்துளி பாடல் பனித்துளியாகவே ரசிகர்களை குளிர்வித்தது.

    13 ஆண்டுகள்

    13 ஆண்டுகள்

    இந்நிலையில் இந்தப்படம் வெளியாகி தற்போது 13 ஆண்டுகளை கடந்துள்ளது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இப்போதுதான் பார்த்தது போன்ற பசுமையான நினைவுகளை இந்தப் படம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் கொடுத்ததுதான் படத்தின் சிறப்பு.

    English summary
    Surya's Vaaranam Aayiram movie crosses 13 years
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X