»   »  அண்ணன் சூர்யா படத்தில் தம்பி கார்த்தியும் கை கோர்க்கிறாராமே?

அண்ணன் சூர்யா படத்தில் தம்பி கார்த்தியும் கை கோர்க்கிறாராமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அண்ணன் சூர்யாவின் எஸ்3 படத்தில் அவருடன் இணைந்து நடிகர் கார்த்தி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது ஹரியின் எஸ்3 படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் இவருடன் இணைந்து சுருதிஹாசன், அனுஷ்கா, ராதிகா, கிரிஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Surya Join Hands with Karthi for S3

இந்நிலையில் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர் கார்த்தி ஒருசில காட்சிகளில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தப் படத்தில் சில முக்கியமான காட்சிகளில் ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க ஹரி திட்டமிட்டிருக்கிறார். மற்ற நடிகர்களிடம் கேட்பதை விட கார்த்தியிடம் கேட்கலாம் என்று அவரிடமே கேட்க அவரும் சம்மதம் சொல்லி விட்டாராம்.

இதனால் ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி இருவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறப் போவதாக கூறுகின்றனர்.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூர்யா நடித்த ஆயுத எழுத்து படத்தில் கார்த்தி துணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Surya and Karthi Appearing in the same film, the Official Announcement will be Expected soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil