»   »  மில்லியன் டாலர் படமானது சூர்யாவின் '24'!

மில்லியன் டாலர் படமானது சூர்யாவின் '24'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் வெளியான மூன்றே நாட்களில் ஒரு மில்லியன் டாலர்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது சூர்யாவின் 24.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடித்த படம் 24. கடந்த வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.


2000 அரங்குகள்

2000 அரங்குகள்

தமிழகம் உள்பட உலகெங்கும் 2000 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. தமிழகத்தில் 400 அரங்குகளில் வெளியானது.


வரவேற்பு

வரவேற்பு

டைம் மெஷின் எனும் கால எந்திரம் பற்றிய படம் என்பதால், ரசிகர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவமாக இருந்தது. எனவே நல்ல ஓபனிங் கிடைத்தது.


அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அமெரிக்காவில் தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியானது. இதனையொட்டி தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார் சூர்யா. கலிஃபோர்னியாவில் ஃப்ரிமான்ட் நகரில் நடந்த சிறப்புக் காட்சியிலும் சூர்யா பங்கேற்றார்.


வசூல்

வசூல்

வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 24 படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு மூன்றே நாட்களில் 1 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது, 24 படத்தின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள். வியாழக் கிழமை நடந்த சிறப்புக் காட்சிகளின் வசூலையும் சேர்த்து ஒரு மில்லியன் டாலர்கள் வசூலாகியுள்ளது.


சூர்யா படங்களில் புது சாதனை

சூர்யா படங்களில் புது சாதனை

சூர்யாவைப் பொருத்த வரை இது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை அவரது எந்தப் படமும் அமெரிக்காவில் இவ்வளவு வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Suryia’s ‘24’ has joined the prestigious one million dollar club in USA within three days along with its Thursday premiere.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil