»   »  'பில்லா' அஜீத் வழியைப் பின்பற்றும் சூர்யா?

'பில்லா' அஜீத் வழியைப் பின்பற்றும் சூர்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: '24' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அப்படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இயக்குநர் விக்ரம் குமார் இறங்கியிருக்கிறாராம்.

சூர்யா-சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான '24' உலகம் முழுவதும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.


இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாகத்தை விக்ரம் குமார் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


24

24

டைம் டிராவல் அடிப்படையில் உருவான இப்படத்தில் வாட்ச்சை வைத்து விக்ரம் குமார் கதை சொல்லியிருந்தார். விஞ்ஞானியான தம்பி கண்டுபிடிக்கும் வாட்சை அண்ணன் கைப்பற்ற முனைவார். இந்தப் போராட்டத்தில் தம்பியும், தம்பி மனைவியும் இறந்து போக, தம்பியின் குழந்தை வாட்சுடன் தப்பித்து விடும். 26 வருடங்கள் கழித்து சுயநினைவு பெறும் அண்ணன், வாட்சை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் கதை.


ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு

டைம் டிராவல் கதைக்கு ஏற்ற மாயாஜால ஒளிப்பதிவு, பிரமாண்ட பட்ஜெட், சூர்யா வில்லத்தனம் போன்றவை இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. உலகம் முழுவதும் 2௦௦௦க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியான இப்படம் இந்த வாரத்தில் 100 கோடியைக் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பில்லா

பில்லா

இந்நிலையில் 'பில்லா' பாணியில் இப்படத்தின் 2 வது பாகத்தை எடுக்கப் போவதாக கூறுகின்றனர். அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அப்படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கினர். அஜீத் எப்படி 'பில்லா'வாக மாறினார் என்று 2 வது பாகத்தின் கதை அமைந்திருந்தது.


ஆத்ரேயா

ஆத்ரேயா

அதேபோல இப்படத்தின் 2 வது பாதியில் அண்ணன் ஆத்ரேயா- தம்பி சேதுராமன் இருவருக்கும் இடையில் பகை எப்படி உருவானது, என்று சொல்லப் போகிறார்களாம். இயக்குநர் விக்ரம் குமார் இப்படத்திற்கான பாதிக்கதையை எழுதி விட்டாராம். 24 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆத்ரேயா மீது இரத்தம் இருப்பது போல் தான் இருக்குமே, தவிர புல்லட் தெரியவில்லை. அதனால், இரண்டாம் பாகத்தின் கதை அங்கிருந்து தொடங்கும் எனக் கூறுகின்றனர். விரைவில் 2 வது பாகம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Sources Said Surya and Vikram Kumar both are Planned 24 Movie Sequel. The Official Announcement will be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil