»   »  மே 6-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் 24... அதற்குள் தீருமா தியேட்டர் பிரச்சினை?

மே 6-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் 24... அதற்குள் தீருமா தியேட்டர் பிரச்சினை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடித்துள்ள 24 திரைப்படம் வரும் மே மாதம் 6-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனை படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் 24. இந்தப் படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


பாடல்கள்

பாடல்கள்

ரஹ்மானின் இசையில் சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்புப் பெற்றுள்ளன.


ரிலீஸ்

ரிலீஸ்

இந்தப் படத்தை ஏப்ரல் கடையில் வெளியிடப் போவதாக முன்பு கூறியிருந்தனர். ஆனால் இப்போது ஒரு வாரம் முன்பாகவே வெளியாகிறது 24.


அமெரிக்காவில்

அமெரிக்காவில்

இந்தத் தகவலை படத்தின் அமெரிக்க விநியோகஸ்தரான சினிகேலக்சி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு நாள் முன்பாகவே படத்தின் சிறப்புக் காட்சியும் திரையிடப்படுகிறது.


தியேட்டர் பிரச்சினை தீருமா?

தியேட்டர் பிரச்சினை தீருமா?

தெறி படப் பிரச்சினையில் தியேட்டர்காரர்களுடன் தயாரிப்பாளர்கள் முரண்பட்டு நிற்கின்றனர். இனி செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களுக்கு படங்கள் தரப் போவதில்லை என்று தயாரிப்பாளர் கூறிவிட்ட நிலையில், 24 வெளியாகிறது. அதற்குள் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
English summary
Surya - Samantha starrer 24 movie will be released on May 6th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil