»   »  சூர்யாவின் 24 அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

சூர்யாவின் 24 அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 24 படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியை சூர்யா அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் மனத்திலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிட்டது.

யாவரும் நலம் விக்ரம் குமார், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சூர்யா ஆகியோரினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.


இன்னும் 2 தினங்களில் வெளியாகும் 24 டீசரில் உள்ள சில சிறப்பு அம்சங்கள் மற்றும் இயக்குநர் விக்ரம் குமார் பேட்டி உங்களுக்காக.


3 சூர்யா

3 சூர்யா

இப்படத்தில் சூர்யா முதன்முறையாக வில்லன், விஞ்ஞானி மற்றும் இளைஞன் என 3 விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். இதில் விஞ்ஞானி சூர்யாவுக்கு நித்யா மேனனும், இளைஞன் சூர்யாவுக்கு சமந்தாவும் ஜோடியாக நடித்திருக்கிறார்களாம்.


விஷுவல் காட்சிகள்

விஷுவல் காட்சிகள்

டைம் மெஷின் கதையென்பதால் படத்தின் விஷுவல் காட்சிகள் ரசிகர்களை கண்டிப்பாக ஈர்த்து விடும் என்று கூறுகின்றனர். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்தின் பெரும் பலமாக மாறியிருக்கிறது.


ஆத்ரேயா

ஆத்ரேயா

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவின் பெயர் ஆத்ரேயா. மேலும் டீசரின் ரன்னிங் டைம் சுமார் 1 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.


விக்ரம் குமார்

விக்ரம் குமார்

படம் குறித்து இயக்குநர் விக்ரம் குமார் ஒரு பேட்டியில் "24 படம் கண்டிப்பாக பெரியளவில் பேசப்படும். நான் இந்தப் படத்தின் கதையை சொல்ல ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றபோது அவர் மிகக் குறைந்த நேரமே கொடுத்தார். ஆனால் நான் கதை சொல்ல ஆரம்பித்தவுடன், அவர் தொழுகை செய்வதைக் கூட மறந்து கதை கேட்டார். அந்தளவுக்கு கதை அவருக்குப் பிடித்திருந்தது.


காட்சிகள் மிகவும்

காட்சிகள் மிகவும்

நான் வசனம் எழுதியதை படத்தில் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டோம். உதாரணமாக "அந்தக் கதாபாத்திரம் வந்து நின்றவுடன் எதிரிலிருந்த கட்டிடம் அசைந்தது'' என்று எழுதியிருப்பேன். இதுபோன்று பல காட்சிகளை எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது.


மனம் படத்தை

மனம் படத்தை

முதலில் தெலுங்கில் நான் இயக்கி ஹிட்டடித்த மனம் படத்தை தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் சாரை வைத்து எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால் புதிதாக ஒரு கதை செய்யலாம் என்றுதான் இந்தப் படத்தை கையில் எடுத்தேன்.


சூர்யா

சூர்யா

இந்தப் படத்தை தத்ரூபமாக கொண்டுவர ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா நிறையவே ஒத்துழைப்பு கொடுத்தார். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்" என்று தெரிவித்திருக்கிறார்.


மொத்தத்தில் சூர்யாவின் உழைப்பு கண்டிப்பாக வீண் போகாது என்று இதிலிருந்து தெரிகிறது. எனினும் சூர்யாவின் உழைப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பார்க்கலாம்.English summary
24:Suriya's Much - Awaited movie Some Special Elements Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil