»   »  கிரேட் தியா... வீட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த மகளுக்கு சூர்யா பாராட்டு

கிரேட் தியா... வீட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த மகளுக்கு சூர்யா பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றம் வீட்டிலிருந்து வர வேண்டும் என்பார்கள். அந்த வகையில் தனது செயலால் தனது வீட்டிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அசத்தியுள்ளார் நடிகர் சூர்யா.

யாதும் ஊரே என்ற இயக்கத்தை நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக தொடங்கியுள்ளார். இது தொடர்பான தொடக்கவிழாவில் மாற்றத்திற்கான சரியான நேரம் இது என வருங்காலத் தலைமுறைக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அந்த இயக்கத்திற்கு முதல் ஆதரவு அவரது வீட்டிலேயே கிடைத்துள்ளது.

வீட்டுக்குள்ளேயே ஆதரவு...

வீட்டுக்குள்ளேயே ஆதரவு...

இது தொடர்பாக டிவிட்டரில் கருத்துப் பதிவு செய்துள்ளார் சூர்யா. அதில், ‘ஊரைச் சுத்தப்படுத்தும் இயக்கமான யாதும் ஊரே திட்டத்திற்கு தனது வீட்டிலேயே ஆதரவு கிடைத்திருப்பதாக' அவர் தெரிவித்துள்ளார்.

கிரேட் தியா...

அதாவது, ‘கிரேட்.. எனது மகள் தியா, எனது வீட்டுக்குள் பிளாஸ்டிக் பைகள் வருவதை தடுத்து விட்டார். நாமும் மாறுவோம்' என பெருமிதத்துடன் சூர்யா கூறியுள்ளார்.

லைக்ஸ்...

லைக்ஸ்...

சூர்யாவின் இந்த டிவிட்டை ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர்.

பாராட்டு...

மேலும், தியாவின் செயலை மற்ற நடிகர்கள் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். கூடவே, அப்பாவைப் போல பிள்ளை என சூர்யாவிற்கும் அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சூப்பர்...

சூப்பர்...

அதோடு, தியாவைப் போலவே இனி தாங்களும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர்.

சூப்பர்ல!

English summary
Great!! Daughter Diya stopped plastic bags entering home..! Let's be the change!! #yadhum , actor Surya tweeted.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil