அதிரடி ஆக்ஷன் காட்சிகள்... சூர்யா படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் வரும் பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்திற்கு தற்போது தணிக்கை குழு யூ/ஏ சான்று வழங்கியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தின் வெற்றி மற்றும் வரவேற்பை அடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரியங்கா அருள் மோகன். மேலும் வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு பஞ்சு அருணாசலம் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

சூர்யாவின் கடந்த இரு படங்களான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரு படங்களும் ஓடிடியில் நேரடியாக ரிலீசான நிலையில் தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இமான் இசை

இமான் இசை

படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா மற்றும் சும்மா சுர்ருன்னு ஆகிய 3 பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சுர்ருன்னு பாடலை எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன்.

படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்

படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்

இந்நிலையில் படத்திற்கு தற்போது யூ/ஏ சான்றிதழை தணிக்கைக் குழு அளித்துள்ளது. படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

அடுத்தபடம் குறித்த அறிவிப்பு

அடுத்தபடம் குறித்த அறிவிப்பு

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா அல்லது பாலா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் எந்தப் படத்தின் சூட்டிங்கில் அவர் முதலில் இணைவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X