»   »  என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்! - சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் #ThaanaSernthaKoottam

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்! - சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் #ThaanaSernthaKoottam

Posted By:
Subscribe to Oneindia Tamil
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இவ்வளவு வரவேற்ப்பா.. ???

தானா சேர்ந்த கூட்டம் படம் நாளை வெளியாகும் நிலையில், படம் குறித்து சூர்யா தன் அனுபவத்தை நேற்று பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும்.

அனிருத் அனிருத்

அனிருத் அனிருத்

அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் தானா சேர்ந்த கூட்டத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன்.

பெரும்பாக்கத்தில்

பெரும்பாக்கத்தில்

இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ்தான். எனக்கு முன்பைப் போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.

சாதாரண சூர்யா

சாதாரண சூர்யா

நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னைப் போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால், கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும்.

அன்பா இருப்போம்

அன்பா இருப்போம்

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்," என்றார்.

English summary
Surya is sharing his Thaana Serntha Koottam experiences as Pongal Special

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X