»   »  மிஸ்டர் துரைசிங்கம் இந்தாங்க உங்க கனடா பாஸ்போர்ட்... எஸ்3 யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

மிஸ்டர் துரைசிங்கம் இந்தாங்க உங்க கனடா பாஸ்போர்ட்... எஸ்3 யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 3 படத்தின் தலைப்பை எஸ் 3 என்று எந்த நேரத்தில் வைத்தார்களோ? சமூக வலைதளங்களில் எஸ்3 யை நல்லா வச்சு செய்கின்றனர் நெட்டிசன்கள்.

இந்தப் படத்தில் சூர்யா சர்வதேச போலீசாக நடிக்கிறார் என்பதை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் அஞ்சான், மாசுவைத் தொடர்ந்து எஸ்3 யும் நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டது.

நாஞ்சில் சம்பத்தைத் தொடர்ந்து சிங்கம் 3 யின் தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் இவர்களிடம் மாட்டிக் கொண்டதில் விதவிதமான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் உருவாக்கி மகிழ்ந்து வருகின்றனர்.

மிஸ்டர் துரை சிங்கம்

மிஸ்டர் துரை சிங்கம் இப்போ நீங்க கனடாவுல பதுங்கி இருக்கிற அனிருத்த அரெஸ்ட் பண்ணி இந்தியா கொண்டுவரணும். அதுக்குத் தேவையான கவர்ன்மெண்ட் ஆர்டர், கனடா போறதுக்கான பிளைட் டிக்கெட், விசா அப்புறம் இண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் எல்லாமே இதுல இருக்கு. சூழ்நிலைகேற்ப இந்த மீமை கிரியேட் செய்திருக்கிறார் தனி ஒருவன்.

என்னைப் புதைச்ச

என்னைப் புதைச்ச

"என்னைப் புதைச்ச இடத்துல இன்னொருத்தன் மொளைச்சு வருவாண்டா" என்று புலியில் விஜய் பேசிய வசனத்தை சிங்கம் சூர்யாவுடன் கோர்த்து விட்டிருக்கின்றனர்.

ஜேம்ஸ்பாண்டையே

"பாண்ட் நீ எங்க இருக்க என்று அவரது மேலதிகாரி கேட்க அதற்கு பதில் சொல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் ஓடிக் கொண்டிருக்கிறார். ஏன்னா அவர துரை சிங்கம் துரத்திட்டு இருக்காரு " சர்வதேச போலீஸ்னு போட்டதுக்காக இப்படியா ஒருத்தர கலாய்க்கிறது.

காஞ்சனா, காஞ்ஜூரிங்

காஞ்சனா, காஞ்ஜூரிங்

"நான் காஞ்சனா, காஞ்ஜூரிங் பார்த்தெல்லாம் பயப்படல ஆனா சிங்கம் 3 பர்ஸ்ட்லுக் பார்த்துட்டு பயமா இருக்கு" என்று மாதவன் ஷாலினியிடம் கூறிய வசனத்தை உல்டா செய்து மாற்றியிருக்கின்றனர்.

அடுத்து யாராவது வசமாக சிக்கும் வரை நெட்டிசன்கள் எஸ்3 மீதான தங்கள் மீம்ஸ் திறமையை நிறுத்தப் போவதில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

யாராவது வந்து சிங்கத்தை காப்பாற்றுவார்களா?

Read more about: s3, surya, சூர்யா, எஸ் 3
English summary
Surya - Hari Combo S3(Singam 3rd Squeal) First Look & Title related Memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil