ஆயுத பூஜையன்று வெளியாகிறதா சூர்யாவின் எஸ்3?
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சிங்கம் 3 படத்தை, ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்,' 'சிங்கம்-2' ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. 'சிங்கம்' படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார்.

'சிங்கம்-2' படத்தில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். தற்போது உருவாகி வரும் எஸ் -3 படத்தில் சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நடித்து வருகின்றனர்.
எஸ் 3 படப்பிடிப்பானது விசாகப்பட்டினத்தில் தொடங்கி காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது ருமேனியா நாட்டில் படக்குழு முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அதிரடி ஆக்ஷன்களுக்கு குறைவில்லாமல் உருவாகி வரும் இப்படத்தை வருகின்ற ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் வசூலை மொத்தமாக அள்ளிவிடலாம் என்பது எஸ் 3 குழுவினரின் எண்ணமாக உள்ளது.
சூர்யாவிற்கு வில்லன் யாரென்பதை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











