»   »  துரை சிங்கத்தின் கர்ஜனைகளை இனி காரைக்குடி மக்களும் கேட்கலாம்

துரை சிங்கத்தின் கர்ஜனைகளை இனி காரைக்குடி மக்களும் கேட்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா-ஹரியின் எஸ்3 படக்குழுவினர் இன்றுமுதல் காரைக்குடி நகரத்தில் தங்களது படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எஸ்3. சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து அதன் 3 வது பாகமாக எஸ்3 படத்தை ஹரி எடுத்து வருகிறார்.

Surya's S3 Shooting in Karaikudi

இதில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, சுருதிஹாசன், ராதிகா, கிரிஷ் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. தொடர்ந்து இதன் 2 வது கட்ட படப்பிடிப்பை இன்று காரைக்குடியில் தொடங்கி இருக்கின்றனர்.

ஒரு வாரம் காரைக்குடியில் தங்கி படப்பிடிப்பை நடத்திய பின்னர், 3 வது கட்டமாக சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த ஹரி திட்டமிட்டு இருக்கிறார்.

சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இடம்பெறும் படத்தின் முக்கிய காட்சிகள் இங்கே படம்பிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தவிர ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாரிஸ் ஆகிய கண்டங்களில் எஸ் 3 படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக நடைபெறவிருக்கிறது.

படத்தின் கதை இந்தியாவில் ஆரம்பித்து பாரீஸில் முடிவது போன்று திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி, இந்தப் படத்தில் சூர்யா சிபிஐ அதிகாரியாக நடிக்ககிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்' நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா-ஹரி கூட்டணியில் 5 வது முறையாக உருவாகும் எஸ்3 படத்தை இந்த வருடத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

English summary
Hari's S3 Team Today start shooting from Karaikudi. Next the film will be shot in Africa, Australia and Paris Countries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil